பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.
*****
கோவையில்…
பொள்ளாச்சி பாலியல் வெறியாட்டத்தைக் கண்டித்து போராடிய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 167 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து, கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் 19.03.2019 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து கல்லூரி மாணவர்களே !
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்போம்!
கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான பொய் வழக்கு, அடக்குமுறையை முறியடிப்போம்!
இரவிலும் இடையறாது தொடர்ந்த உள்ளிருப்புப் போராட்டம்:
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.
*****
பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளிகளை தூக்கிலிடு ! ஆபாச இணையதளங்களை தடை செய்… ! என்ற முழக்கத்தை முன்வைத்து 19.03.2019 அன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை பாரீஸ் கார்னர் அருகில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இம்மாணவர்களைக் கைது செய்த போலீசு, அவர்களை ரிமாண்ட் செய்யப் போவதாக மிரட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இவ்விவகாரம் பரவியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை விடுவித்தது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

படிக்க:
♦ பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
♦ பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா