என் அம்பேத்கர், அவர் சிலைகளில் குடியிருப்பதில்லை, பௌத்த மடாலய சடங்குகளின் மலர்களின் வாசனையில் அவர் வசிப்பதில்லை..

சங் பரிவார கும்பலிடம் தலித் அரசியலின் பெயரில் சரணடையும் கும்பலின் வீட்டு வரவேற்பறையில் வரவேற்கும் படங்களில் அவர் வாழ்வதில்லை..
தங்களுடைய சுயநல வர்க்க நோக்கத்திற்காக, ஆளும் வர்க்கத்திற்கு மக்களை காட்டி கொடுப்பதற்கே, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு செருப்பை உருவாக்கி, அதற்கும் பொருந்தும்படி மக்களின் கால்களை வெட்டி சுகம் காணும் கயவர்களிடம் கண்டிப்பாக இல்லை..
சொந்த வர்க்க நலன்களுக்காக வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் என்.ஜி.ஓ கும்பல்களில் பிரச்சார நிகழ்ச்சி நிரலில் அவர் கிஞ்சித்தும் இருப்பதில்லை…
படிக்க :
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
அவர் நேர்மையில் குடியிருக்கிறார், தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கி கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னை பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.
உரிமையோடு அவரோடு முரண்படும் வெளியை உருவாக்கித் தந்த, அவர் கைநீட்டி எனக்கு கைகாட்டிய பாதை இடது அரசியல் பாதைதான்…
அதை மறுக்கும் எவரொருவரும் அரசியல் பகையாளியே…