இந்திய நாடு, அடி(மை) மாடு !
இராமனை விடவும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்குப் பெரிதும் பயன்பட்ட மாடுதான் சங்கப் பரிவாரத்தின் பக்திக்கு உரியது என்றால், அது மிகையல்ல. சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் அவர்களுக்குப் பெரிதும் உதவியது. அதே கோட்பாடு இந்நாட்டை மட்டுமின்றி, பெரும்பான்மை இந்துக்களாகிய தங்களையும் அடிமைகளாக நடத்துவதற்கு பாசிஸ்டுகளுக்குப் பயன்படும் என்பதை மோடிக்கு வாக்களித்த மக்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
தேர்தலுக்குச் சில மாதங்கள் முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் வீழ்ச்சியடைந்திருந்த மோடிக்கான ஆதரவு, “புல்வாமா தாக்குதல், பாலகோட் எதிர்த் தாக்குதல்” என்ற மர்ம நாடகங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் மாறியது.
தேசம், மதம், கட்சி ஆகிய அனைத்தின் உருவமாகவும், தேசத்தின் ஒரே பாதுகாவலனாகவும் மோடியை உருப்பெருக்கிக் காட்டின ஊடகங்கள். கழிவறை முதல் காப்பீடு வரையிலான அனைத்துக்கும் மோடி என்ற தனிமனிதனின் கருணையை நாடே எதிர்பார்த்து நிற்பதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத் தாக்குதலுக்குக் கணிசமான மக்கள் பலியாகினர்.
இவ்வாறு பலியானதை வெறும் ஏமாளித்தனம் என்று மட்டுமே மதிப்பிட முடியாது. ரோகித் வெமுலாவின் தற்கொலை, பசுக் குண்டர்களும், சனாதன் சன்ஸ்தாவும் நடத்திய படுகொலைகள், உனா முதல் பீமா கோரேகான் வரையிலான தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆகிய அனைத்தையும் அங்கீகரித்துச் செல்லும் ஒரு புதிய “சகஜ நிலை” நாடெங்கும் ஏற்பட்டிருக்கிறது.
படிக்க :
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !
♦ ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !
ஒருவேளை இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த “சகஜ நிலை”யை அவர்களால் மாற்றியிருக்க முடியாது. அப்படிப்பட்ட முயற்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடவுமில்லை. மாறாக, இந்த “சகஜ நிலை”யிடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். போர் தொடங்குவதற்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.
மோடியின் வெற்றி தங்களது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்ற மயக்கம் ஏதும் மக்களிடம் இல்லை. நிலவுகின்ற அமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கும், மாற்று குறித்த அவநம்பிக்கைக்கும் நடுவில் இருந்த இடைவெளி, ஒரு பாசிஸ்டின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
தமது வர்க்க நலன் குறித்த மக்களின் சிந்தனையைப் பின்னுக்குத் தள்ளி, கற்பனையான எதிரியைக் காட்டி, தேசவெறியும் மதவெறியும் ஊட்டிப் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது. இவ்வெற்றி அளித்திருக்கும் அதிகாரத்தையும் குண்டர்படைகளின் வலிமையையும் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் பாசிசக் கும்பல் ஒடுக்கும். அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினூடாகத்தான் மக்களின் சிந்தனை மீது கவிந்திருக்கும் காவி இருளை நாம் அகற்ற முடியும்.
இது நமக்கு மட்டுமே நேர்ந்திருக்கும் துயரமல்ல. உலக முதலாளித்துவக் கட்டமைவின் நெருக்கடி பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகளை அதிகாரத்தில் அமர்த்தியிருப்பது போல, நமது நாட்டில் காவி பாசிஸ்டுகளை ஆட்சியிலமர்த்தியிருக்கிறது. பாசிசம் பெற்றிருக்கும் இந்த வெற்றி என்பது முதலாளித்துவக் கட்டமைவு சந்தித்து வரும் தோல்வியின் ஒரு விளைவு. எனவே, காரணத்தை மறந்து விட்டு விளைவை மட்டும் எதிர்ப்பது நிழற்சண்டையாகவே அமையும்.
நிஜமான சண்டைகள் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் கட்டமைவுக்கு உள்ளே தீர்வு கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இப்போராட்டங்களை மக்கள் நடத்துகிறார்கள்.
இக்கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்ற உண்மையை குண்டாந்தடியின் மூலம் அவர்களுக்கு இந்துத்துவ பாசிசக் கும்பல் புரியவைக்கும். அந்தப் புரிதலின் ஊடாகத்தான் இந்துத்துவக் கருத்தியலின் பிடியிலிருந்தும் பாசிசக் கும்பலின் பிடியிலிருந்தும் நாட்டையும் மக்களையும் விடுவிக்க முடியும்.
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |