ந்துத்துவ குண்டர்களால் தூண்டிவிடப்பட்ட ஒரு கும்பல் வன்முறையில் ஒரு இளைஞர் கொல்லப்படுகிறார். நாடே இந்தக் கொலையால் அதிர்ச்சி கொள்கிறது. ஆனால், நாட்டின் பிரதமர் அதுகுறித்து கள்ள மவுனம் காக்கிறார். ஒரு கட்டத்தில் அழுத்தத்தின் பேரில் ‘கவலை’ தெரிவிக்கிறார். அந்தக் கவலை கொல்லப்பட்டவர் குறித்த அல்ல, கொல்லப்பட்டவரால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக.

பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டது ‘வலி’ ஏற்படுத்துவதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ஆனால், அந்த சம்பவத்துக்காக ஒட்டுமொத்த மாநிலத்தையும் குறைகூறாலாமா என ஜார்க்கண்டுக்கு ஆதாரவாக ஒரு மாநிலத்தின் பிரதிநிதி போல பேசியிருக்கிறார்.

தப்ரேஸ் அன்சாரி

ஜார்க்கண்ட் கும்பல் கொலைகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சொல்வது தவறானது என்றும், ஒரு குற்றத்துக்காக மாநிலத்தில் வசிக்கும் அனைவரையும் குற்றம் சாட்டக்கூடாது என்றும் அவர் பேசினார். மக்கள் சட்டம் மற்றும் நீதியில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் மோடி. குற்றத்தைப் பற்றி பிரதமருக்கு இருக்கும் கவலையைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதிருக்கும் கவலையே அதிகமாக உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து திருட்டுக் குற்றம் சாட்டியும், கால்நடைகளை கடத்தினார்கள் என்றும், மாடுகளை வெட்டினார்கள் என்றும் கூறி, சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட தலித்-பழங்குடிகள் மீது கும்பல் தாக்குதல் நடத்துவது வழக்கமாகவே மாறிவிட்டது. கும்பல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது இந்துத்துவ கும்பல் சொல்லும் காரணங்களை வைத்து வழக்குப் போடுவதையே போலீசும் செய்து கொண்டிருக்கிறது.

ஜார்க்கண்டில் கொல்லப்பட்ட 22 வயது, தப்ரேஸ் அன்சாரியை ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல், அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. ஜார்க்கண்ட் போலீசு அன்சாரி குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறி நீதிமன்ற காவலில் வைக்கிறது. அவருடைய குற்றம், பைக்கை திருட முயற்சித்தது மட்டும்தான். போலீசின் ஆரம்பக்கட்ட வழக்கில், 12 மணி நேரம் தொடர்ச்சியாக அன்சாரி தாக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.

நான்கு நாட்களுக்குப் பிறகு, அன்சாரி உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். கொண்டு வரப்பட்டபோதே இறந்துவிட்டதாக அறிவிக்கிறது மருத்துவமனை. இரத்தம் வருமளவுக்கு கும்பலால் தாக்கப்பட்ட அவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால், போலீசு இந்தத் தாக்குதல் குறித்து அன்சாரி எதையும் சொல்லவில்லை என்பதால் அதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்கிறது. அதே நேரத்தில், அன்சாரியின் வீடியோ சுடச்சுட சமூகவலைத்தளங்களில் இந்துத்துவ கும்பலால் பகிரப்பட்டது.

படிக்க:
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ இந்திய நாடு, அடி(மை) மாடு !

இந்துத்துவ கும்பல் அரங்கேற்றிய அனைத்து கும்பல் கொலைகள் ஒரே மாதிரியானவை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாத்ரியில் கொல்லப்பட்ட முகமது அக்லக், மாட்டிறைச்சி கொலைகளுக்கு பலியான முதல் பலி. அப்போது உ.பி. போலீசு அக்லக் வீட்டு பிரிட்ஜில் என்ன கறி இருந்தது என்கிற விசாரணைக்குத்தான் முதலில் ஆணையிட்டது. அவர் மீது அவருடைய வீட்டினர் மீது இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்தியதையும் அதில் முதியவரான அக்லக் கொல்லப்பட்டது குறித்தும் சட்டம் கவலைப்படவில்லை.

உலகம் முழுமைக்குமே கண்டனத்தை எழுப்பிய அக்லக்-இன் மரணத்துக்கு நீதி வழங்க மறுத்த நீதிமன்றம், அவர் கொல்லப்பட்ட ஓராண்டுக்குள் பசு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அக்லக் மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மோடி சொல்லும் சட்டமும் நீதியும் இப்படித்தான் தன் ‘கடமை’ ஆற்றின. இந்த கும்பல் கொலையை திட்டமிட்டு நடத்தியதற்காக கொலையாளிகளில் சிலருக்கு பாஜக பதவி கொடுத்து பாராட்டியது நடந்தது.

2017-ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநில ஆல்வாரில் பெஹ்லு கான், கால்நடைகளை கடத்திய சந்தேகத்தின் பேரில் இந்துத்துவ கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். சில மாதங்கள் கழித்து, கும்பலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த கான் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிய போதிய ஆதாரம் இல்லை என கூறியது போலீசு. ஓராண்டு கழித்து கானுடன் இருந்த இருவர் மீது தாக்குதலுக்கு உள்ளாகி உயிரோடிருந்த இருவர் மீது கால்நடை கடத்தல் வழக்கு பாய்ந்தது.

2018-ஆம் ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. படித்த சுயதொழில் செய்துகொண்டிருந்த 26 வயதான முகமது ஃபரூக் கான், இருசக்கர வாகனத்தை திருடியதாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஃபரூக் தாக்கப்படும்போது அதை வேடிக்கைப் பார்க்கிறது போலீசு. அந்தக் கொலை சம்பவத்தில் சிலர் மீது வழக்குப் போடப்பட்டது. ஆனால், ஃபரூக் திருட்டு குற்றத்துக்காக கும்பலால் தாக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகை சொன்னது.

படிக்க:
எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam
♦ அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

இதுதான் நம்மை உறைய வைக்கும் உண்மையாகும். தூண்டிவிடப்பட்ட பெரும்பான்மை ஆத்திரம் கொலைகளை முதன்மையாக செய்ய வைக்கிறது. போலீசின் முதல் தகவல் அறிக்கையும் குற்றப்பத்திரிகையும் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறுகளால் கொல்லப்பட்டார்கள் என்றே கூறுகிறது.

இதுதான் பிரதமர் கூறும் நீதி. சட்டம் அல்லது அதை செயல்படுத்தும் அமைப்பு, சிறு குற்றங்கள் அல்லது கற்பனையான குற்றங்களை வெறுப்பின் பேரில் நடந்த கொலைகளாக ஏற்கவில்லை; நீதிக்கான முகாந்திரம் இல்லை என்றே அவை கூறுகின்றன.


அனிதா
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க