காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !

அழகான காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும்; ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும். என காஷ்மீரிகளின் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க அலைகிறார்கள் காவிகள்.

4

ன்னர் காலங்களில் நடந்த போர்களில் வென்ற மன்னன், தோற்றவர்களின் மண்ணையும் பெண்ணையும் அபகரித்துக் கொள்வதை அறிவோம். இந்துத்துவ காவிகள் காஷ்மீரிகள் மீது தொடுத்திருக்கும் போரில் அவர்களுடைய மண்ணும் பெண்ணும் வேண்டுமென பகிரங்கமாகவே கேட்கிறார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை நீக்கும் முடிவை பாஜக அரசு அறிவித்த நொடியில், காவிகள் அதைக் கொண்டாடி தீர்த்தனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி, “பாஜகவைச் சேர்ந்த மணமாகாத ஆண்கள் காஷ்மீருக்குச் சென்று நிலத்தை வாங்கவும் திருமணம் செய்து கொள்ளவும் வரவேற்கப்படுகிறார்கள்” என பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

BJP MLA vikram saini
பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி

“மோடிஜி நமது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். ஒட்டுமொத்த நாடும் இதைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது” என குதூகலித்திருக்கும் அவர்,

“காஷ்மீரி பெண்களை மணப்பதற்கு இப்போது தடை ஏதும் இல்லை. முசுலீம் செயல்பாட்டாளர்கள்கூட இப்போது மகிழ வேண்டும், இப்போது அவர்கள் வெள்ளையான காஷ்மீர் பெண்களை மணக்கலாம்” என மோடி அரசின் முடிவை கொண்டாடும் வகையில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

“உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்தார் பட்டேல் செய்ய விரும்பியதை செய்துள்ளார். இப்போது அவர்களை பதவியிலிருந்து இறக்க எவராலும் முடியாது” என்ற பாஜக எம்.எல்.ஏ., “தீபாவளியை விளக்கேற்றி கொண்டாடுவதைப் போல, வீட்டில் இதைக் கொண்டாடுங்கள்” என கூட்டத்தினரிடையே பேசியுள்ளார்.

படிக்க:
காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்
♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !

புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசி, நாட்டையே அழிக்க வேண்டும் என சொன்னவர் இவர். அதோடு, இந்த நாட்டில் வாழ்வது பாதுகாப்பானது இல்லை என சொல்லும் தேச விரோதிகளை வெடிகுண்டுகளுடன் இணைத்து வெடிக்கச் செய்ய வேண்டும் எனவும் பேசியவர்.

பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சய்னி பாஜக தொண்டர்களிடையே பேசிய நிலையில், பஜ்ரங் தள் காவிகள், காஷ்மீரில் நிலத்தை வாங்க வேண்டும் என பொதுமக்களுக்கு ‘அழைப்பு’ விடுக்கிறது. தமிழகத்தின் கே.டி. ராகவன், ‘காஷ்மீரில் ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும்’ என எலும்புக்கு அலையும் நாயைப் போல தனது ‘ஆசையை’ ட்விட்டரில் வெளிப்படுத்துகிறார்.

ராகவனின் ஈனத்தனமான ‘ஆசை’க்கு தமிழ் சமூக ஊடகங்களில் மக்கள் தக்க அடியைக் கொடுத்தனர்.

“ஒரு சென்ட் என்ன ஒரு லட்சம் சென்ட் கூட வாங்குங்க! ஆனா கடைசியில் மிஞ்சப்போவதென்னவெறும் ஆறடிதான் Mr.ராகவன். இன்னொரு மனிதனின் வாழ்வுரிமையை பறிக்க விரும்பும் உங்களுக்கெல்லாம் உங்களின் 30 கோடி தெய்வங்கள்தான் நல்ல புத்தியை தரனும்!.
என்ன எழவு ஆன்மீகம் இது?
நாத்திகர்கள் நல்லவர்கள்!” என்கிறார் ஜானி.

“மட்டமான Mother rat என்பவன் யாரெனில் Zomato -ல சாப்பாடு எடுத்துட்டு வரும் முஸ்லிம் வேண்டாம். ஆனால், 1 செண்ட் நிலம் முஸ்லிம் நிலமா இருந்தாலும் கூட வாய பொளந்துக்கிட்டு வாங்குவேன் என்பவன்..” என சாட்டையடி கொடுத்திருக்கிறார் தமிழ் கிறுக்கு.

இந்துத்துவ காவிகள் குஜராத்திலும் உத்தர பிரதேசத்திலும் கட்டவிழ்த்த முசுலீம்கள் மீதான வன்முறைகளில் அவர்களுடைய பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததும் அவர்களுடைய உடமைகளை திருடியதும் கடந்த கால வரலாறு.

இன்று அதே காவிகள், ‘அரசு’ என்கிற பெயரில் காஷ்மீரை ஆக்கிரமித்துக்கொண்டு, மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க அலைகிறார்கள். அதை வெட்கமே இல்லாமல் பகிரங்கமாகச் சொல்லவும் செய்கிறார்கள்.


கலைமதி
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா.