காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய படையினரை பெருமளவில் இறக்கியது இந்திய அரசு. கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் முள்வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

0

ந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியதைக் கண்டித்தும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்ததைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கார்கிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த கவுன்சிலர் ஜாஹிர் உசைன், வழக்கறிஞர் தாலிப், ஹாஜி நிசார் உள்ளிட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டு,  அவர்கள் மீது பிரிவு 144-ன் கீழ் வழக்குப் போட்டப்பட்டுள்ளது.

கார்கிலில் முழக்கங்களை எழுப்பும் போராட்டக்காரர்கள்.

போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடியும் கண்ணீர் புகையையும் பயன்படுத்தியது போலீசு.

போராட்டத்தில் முழக்கம் எழுப்பும் ஒருவரை, அடக்க முயற்சிக்கிறது பாதுகாப்புப் படை.

கூட்டு நடவடிக்கைக்குழு கார்கில் நகரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், டிராஸ், சங்கோ, சுரு, புக்காம் மிஞ்சி போன்ற பகுதிகளிலிருந்து நகரை நோக்கி பலர் பேரணியாக வந்தனர். கூட்டு நடவடிக்கைக்குழு, முழு அடைப்புக்கும் பெருந்திரள் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல மக்கள் நகருக்கு நுழைவதை முறியடித்துள்ளது பாதுகாப்புப் படை.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய காவலர்களை பெருமளவில் இறக்கியது இந்திய அரசு.

பல்வேறு பகுதிகளில் சாலைகள் முள்வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலிகள்.

கூட்டு நடவடிக்கைக்குழு புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தவுடன் கார்கில் மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தடை உத்தரவு அமலானது. மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என அந்த ஆணை தெரிவித்தது.

கார்கிலில் பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள்.

கூட்டு நடவடிக்கைக்குழுவின் உறுப்பினர் ஹாஜி உசைன், நூற்றுக்கணக்கானவர்கள் ஜமா மசூதியிலிருந்து ஊர்வலமாக வந்ததாகக்கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் பிரிவு 370 மற்றும் 35 ஏ மீண்டும் அமலாக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 12 பேரை வாகனத்தில் ஏற்றிச் செல்கிறது போலீசு.

லால் சோக் வரை பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை வழியிலேயே பாதுகாப்புப்படை நிறுத்தி கைது செய்தது.

வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என்கிறார்கள் போரட்டக்காரர்கள்.

இந்தப் போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. கர்பலாயின் உரையுடன் நிறைவு பெற்றது. பிரிவு 370 மீண்டும் அமலாக்கப்பட வேண்டும் எனவும் ஜம்மு காஷ்மீரின் மாநில நிலையும் அப்படியே நீடிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.  லடாக் மக்கள் மோடி அரசின் முடிவை கொண்டாடுவதாக லடாக் எம்.பி. ஜாம்யெங்க் நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் அவர் பொய் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும் என்றார் அவர்.

படிக்க:
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

கட்டுரையாளர் : அன்வர் அலி.
தமிழாக்கம் : கலைமதி
நன்றி :
தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க