Tuesday, April 15, 2025
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை

இது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை

நேரெதிர் முகாம்களாக உலகெங்கும் விரிந்து கிடக்கும் சமூக அவலங்களை புகைப்படக் கலை வாயிலாக அம்பலமாக்குகிறது, இக்காட்சிப் பதிவுகள்.

-

மேட்டுக்குடிகளின் குளியல் தொட்டியின் வழுவழுப்புகளுக்காக சிதைக்கப்பட்ட ஒரு மத்திய கிழக்கு நகரத்தில் ஒரு குளியல்!

அகத்தின் அன்பை வெளிப்படுத்தும் ரோஜாக்கொத்தின் சுகமான முட்கள் அல்ல இவை, இலாபவெறிப் போரில் அகதிகளாக்கப்பட்டவர்களின் வருகையைத் தடுக்க வன்மத்தின் உச்சகட்டமாகப் போடப்பட்ட தடுப்புவேலியின் முட்கள்.

“நீங்கள் பருகவிருக்கும் பானம் மிகவும் சூடாக உள்ளது” என்ற காபிக் கோப்பையின் எச்சரிக்கை இந்த மக்களுக்குத் தேவையில்லை. அவர்கள் தாம் பெறத் தவிக்கும் தண்ணீரின் சூட்டை ஏற்கெனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பனியில் வழுக்கிச் செல்லும் ஆனந்தத்திற்குத் துணை புரியும் ஊன்றுக்கோல் அல்ல. ஏகாதிபத்தியங்களின் போர் வெறிக்கு கால்களைப் பலிகொடுத்த சிறுவர்களின் வாழ்க்கைக்குத் துணைபுரியும் ஊன்றுகோல்.

கலைத்துப் போட்டு மீண்டும் கட்டி ஆடும் ஆட்டம் அல்ல இது ! கலைக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் எழுப்ப கொடுக்கப்படும் இளமைப் பலி !

உற்சாகத்தின் கூத்தாடுதல் அல்ல, கொலைக்களத்தின் கூப்பாடு !

ஓவியக் கலையின் சாட்சியமா இது ? இல்லை, ஓயாத போரின் சாட்சியம் இது !

மேற்குலகின் மேட்டுக்குடி குழந்தைகளின் ரசிக்கத்தக்க இடர்பாடற்ற தூக்கம் – இடர்பாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இக்குழந்தையின் தூக்கத்தின் விளைபலன்தான்..

புத்தகங்கள் தூக்கவேண்டிய கையில் புல்லட் கூடுகள்!

மனித இன நாகரிகத்தின் உயர்ந்தகட்டமான காதலின் நாகரீக வெளிப்பாடு ஒருபுறம் – போரின் கொடுமையில் தண்ணீரையே விலங்கினத்தைப் போலக் குடிக்க வேண்டிய அநாகரீக நிலை இன்னொருபுறம்.

‘அழகுப்’ பெண் அல்ல ! அகதிப் பெண் !

படிக்க:
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

காயம்படாத பகுதி உண்டா ? இலாபவெறிப் போரின் விளைவுகள் இப்படிப்பட்ட ரணகளத்திலும், அவற்றின் பலன்கள் மெத்தையிலும் துயில் கொள்கின்றன.

நம் சிந்தனையையும் செயலையும் நம் வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது என்றார் மார்க்ஸ் !

நன்றி : படங்கள் – உகர்கேலன்

– நந்தன்