காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய படையினர் இறந்தபோது, ‘மேன் Vs வைல்டு’ சாகச நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி. மோடியின் ‘தேசப்பற்று’ கேள்விக்கேட்க முடியாத புனித நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மோடியின் சாகசத்தைக் கொண்டாடுகிறது காவி கும்பல். ஆனால், அண்மையில் ஒளிபரப்பான மோடியின் சாகச எபிசோடை கேலியும் கிண்டலுமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றன சமூக ஊடகங்கள்.
புதிய மீம் டெப்ளேட்டுக்காக மேன் Vs வைல்டு நிகழ்ச்சியை மீம் தயாரிப்பாளர்கள் காண்பதாக கேலி செய்கிறார் கிஷன்.
Memers watching #ManVsWild for new meme templates. pic.twitter.com/6VSsVUb1c0
— Kishan Jhunjhunwala (@Jhunjhunastic) August 12, 2019
“சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர்…” என மோடியை அவரது நடிப்பு, நடிகர்களையும் மிஞ்சிவிட்டதாக சொல்கிறார் விஷால்.
National award for the best actor in a comic role male goes to !! #ManVsWild
— Vishal Bagada (@VishalBagada07) August 12, 2019
“மோடி முழு எபிசோடு முடியும்வரை இப்படித்தான் இருந்தார்…” என கண்ணாடியில் தெரியும் தன் பிரதிபிம்பத்துக்குத் தானே மாலையிட்டு தீபாராதணை காட்டும் ஒரு படக்காட்சியை பகிர்ந்திருக்கிறார் ஜிதேஷ்.
Modi ji during the whole episode : pic.twitter.com/4q6VUVZcrY
— Jitesh Rochlani (@jiteshrochlani) August 12, 2019
ஒளிபரப்பான எபிசோடின் பெரும்பாலான நேரம் இந்தி தெரியாத பியர் கிரில்சுக்கு இந்தியில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் மோடி. பியர் கிரில்சுக்கு இந்தி தெரியுமா எனவும் பலர் வினவியுள்ளனர்.
“ஒரு கேள்வி – மோடி இந்தியில் பேசுகிறார், அது புரிவதுபோல் கிரில்ஸ் தலையாட்டுகிறார். அப்படியானால் அவர் இந்தி கற்றாரா?” என சிரிக்கிறார் மாயன்க்.
One question – modi is talking in HINDI, and bear grills is pretending as if he is understanding it …. Did he learn Hindi ? 😀😀 #ManVSWildwithmodi https://t.co/oTbVdeXMnC
— MAYANK (@mayank_mrt) August 12, 2019
“மோடிஜி வித்தைக்காரர், அவர் இந்தி பேசுகிறார். பியர் கிரில்ஸ் அவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார். அற்புதம்” என்கிறார் குணால்.
Modiji is a #magician he speaks in #Hindi and @BearGrylls understands everything. #amazing #ManVsWild #modiondiscovery
— KunalJoshi (@KJ_tweetz) August 12, 2019
“பத்தாம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக உள்ள சிபிஎஸ்இ வழியில் பியர் கிரில்ஸ் படித்து தேர்ச்சி பெற்றிருப்பார் போல…” என்கிறார் யோகேஸ்.
Seems like Bear Grylls passed 10th from CBSE board with hindi compulsory subject. #ManVsWild
— Yᴏɢᴇsʜ (@Yogesh_0708) August 12, 2019
மோடியின் இந்தியை வெகு நேரம் கேட்ட பியர் கிரில்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருப்பதாக கூறுகிறார் தினேஷ்.
After listening to so much Hindi @BearGrylls be like#ManVsWild pic.twitter.com/lmhSd3wf0d
— Dinesh (@hodini82) August 12, 2019
சாகச நிகழ்ச்சியிலும்கூட தன்னைப் பற்றிய ‘பெருமித வரலாற்றை’ மோடி பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை. ‘நான் ஏழையாக இருந்தேன், டீ விற்றேன்.’ எனக்கூறியதும் மீம் உருவாக்குபவர்களுக்கு ’உள்ளடக்கத்தை’ கொடுத்தது. பலர் இதென்ன ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியா எனவும் கேட்டனர்.
“முதல் பதினைந்து நிமிடங்களில் மோடி தான் ஒரு ஏழை; டீ விற்றேன்; தன்னலமற்றவன்; 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் ஓய்வு இதுதான்; நான் கடினமாக உழைக்கிறேன் என்கிறார். அதே நேரத்தில் பியர் கிரில்ஸ் பொறுமையோடு வெட்டுக்கிளியை உண்ணக் காத்திருக்கிறார்..” என்கிறார் கப்பார் சிங்.
In the first 15 mins. Modi has mentioned
I was poor
I sold tea
I am selfless
This is the 1st vacation I am taking in 18 years
I work really hard.While Bear Grylls is patiently waiting to eat a grasshopper. #ManVsWild
— Gabbbar (@GabbbarSingh) August 12, 2019
“இதென்ன மேன் Vs வைல்டா? மன் கி பாத்தா?” எனக் கேட்கிறார் ராய்சன்.
Is this #ManVsWild or Mann ki Baat?
— Royson Dsouza (@royson_d) August 12, 2019
படிக்க:
♦ காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !
♦ எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
“என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார், ‘உங்கள் சட்டை காலரில் என்ன லிப்ஸ்டிக்கின் சாயம் உள்ளது? உங்களுக்கு ஏதேனும் தவறான தொடர்பு உள்ளதா?’
மேன் Vs வைல்டு நிகழ்ச்சியைப் பார்த்த பின் நான் சொன்னேன், “என்னுடைய குழந்தைப் பருவம் ஏழ்மையானது. நான் காலரில் படிந்த லிப்ஸ்டிக் சாயத்தை கழுவ, இமாலயத்துக்கு வெறுங்காலாக நடந்தே சென்று கழுவினேன்”
மனைவி உடைந்து அழுது, என்னை அணைத்துக்கொண்டார். “ என மோடியின் சுயதம்பட்டத்தை எள்ளல் செய்கிறார் அதுல் கத்ரி.
Wife to me – "What is this lipstick mark on your collar. Are you having an affair??"
Me to wife after watching #ManvsWild – "My childhood was very poor. We used to go to the Himalayas bare feet to wash the lipstick marks on the collar"
*Wife breaks down and hugs me
— Atul Khatri (@one_by_two) August 12, 2019
இதில் மனிதரைப் பற்றித்தான் அதிகமாக உள்ளது, காட்டைப் பற்றி குறைவாக உள்ளது என்கிறார் தன்மய்.
It was more inclined towards #Man part and pretty less towards #wild part. #manwins #wildloose #ManVsWild #modiondiscovery
— Tanmoy Kundu (@tanny_rocks007) August 12, 2019
டிஸ்கவரி சேனலின் உரிமையாளர் இப்போது, பணக்கட்டுக்களில் புரள்வதாக பகடி செய்கிறது இந்த ட்விட்.
Owner of discovery channel right now. #ManVsWild pic.twitter.com/t0becyeUh7
— Mask (@Mr_LoLwa) August 12, 2019
இப்போது டிஸ்கவரி சேனலின் டிஆர்பி…
Discovery trp rn.. pic.twitter.com/sQ0yyn9Se8
— Gaurav 🇮🇳 😇 🍏 🤖 (@UpscaledTech) August 12, 2019
பியர் கிரில்ஸ் : உயிர் வாழ்வதற்காக ஒருமுறை நான் பாம்பைக் கொன்றேன் !
மோடி : இது என்ன பிரமாதம், நான் உயிர்வாழ்வதற்காக ஜனநாயகத்தையே கொன்றேன் !மேன் Vs வைல்டு நிகழ்ச்சி குறித்து இந்தப் படத்தையே தமிழ் முகநூல் பதிவர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.பலரும் இந்த நிகழ்ச்சியை விமர்சித்து எழுதியுள்ளனர்.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்