Tuesday, April 15, 2025
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !

காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !

காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-

ந்திய அரசு காஷ்மீரில் கைது செய்துள்ள அரசியல்வாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என 120-க்கும் மேற்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“சமீபத்தில் காஷ்மீரில் பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டிருக்கிறோம். ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவரும் அரசியல்வாதியுமான ஷா ஃபைசல் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலையளிக்கிறது” என அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், “ஷா ஃபைசல் மற்றும் கைதான தலைவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோருகிறோம்” எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

Shah Faesal
ஷா ஃபைசல் (கோப்புப் படம்)

முன்னதாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஃபைசலை கைது செய்த அரசு, அவரை ஸ்ரீநகரில் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள ஒரு விடுதியில் அடைத்துள்ளது. பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பிரிவு 370-ஐ நீக்கும் முன்பாக, காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த வாரம் ஸ்ரீநகரிலிருந்து பிரச்சினைக்குரிய 20 பேரை ‘பாதுகாப்பு நடவடிக்கை’யாக ஆக்ராவில் உள்ள சிறையில் அடைத்தது அரசு.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக, காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கைதான தலைவர்களை விடுவிப்பது குறித்தும் இராணுவ கெடுபிடியை திரும்பப் பெறுதல், துண்டித்த தகவல் தொடர்பை இணைப்பது குறித்தும் அரசு இதுவரை பேசவில்லை. இந்தக் கெடுபிடிகள் எத்தனை நாளுக்கு நீடிக்கும் எனவும் அரசு சொல்ல மறுக்கிறது.

இந்நிலையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், “மக்களின் ஜனநாயக உரிமைகளை மனதில் வைத்து தக்க நடவடிக்கை எடுங்கள்” என்றுள்ளது. “ஜம்மு காஷ்மீரில் நிலைத்தன்மை உறுதி செய்வதுதான் ஜனநாயகம் மற்றும் அமைதி என்பதற்கான பொருளாகும்” எனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஆகஸ்டு 5-ம் தேதி முதல் மொபைல் இணைப்பை துண்டித்தது. பொது இடங்களில் கூடுவதையும் மத்திய அரசு தடை செய்தது. காஷ்மீரில் சில பகுதிகளில் அவ்வவ்போது போராட்டங்கள் நடந்தன. ஜம்முவின் சில பகுதிகளில் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட போதும், தீவிர இராணுவ கண்காணிப்பின் காரணமாக ‘அமைதியே’ நிலவுகிறது.

மோடி தனது சுதந்திர தின உரையில், காஷ்மீர் மக்களின் கனவு இத்தனை நாளும் நசுக்கப்பட்டது; தங்களால்தான் அவர்கள் இனி முன்னேறப் போகிறார்கள் என்கிறார். ஆனால், காவி அரசு காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. சிறைச்சாலைக்குள் வாழ எந்த மக்கள்தான் கனவு காண்பார்கள்?

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க