Tuesday, April 15, 2025
முகப்புசெய்திஇந்தியாடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !

டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !

விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், ஏ.பி.வி.பி. அங்கு உள்ள தூணில் சாவர்க்கரின் மார்பளவு சிலையை வைத்துள்ளது.

-

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படத்தை திரையிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அனுமதி இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சாவர்கர் சிலையை வைத்துள்ளது. அதுகுறித்து நிர்வாகம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், ஏ.பி.வி.பி. அங்கு உள்ள தூணில் சாவர்க்கரின் மார்பளவு சிலையை வைத்துள்ளது. கூடவே, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங்கின் மார்பளவு சிலையையும் கலை பிரிவு அருகே வைத்துள்ளது.

savarkar Busts Delhi University

சாவர்க்கரையும் பகத் சிங்கையும் ஏ.பி.வி.பி. சமன்படுத்தியிருப்பதை இடதுசாரி மாணவர் அமைப்பான AISA-வும் காங்கிரசின் மாணவர் அமைப்பான NSUI-வும் கண்டித்துள்ளன.

பல்கலை நிர்வாகத்திடம் சிலை வைக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்பதால் தாங்களாகவே சிலையை வைத்துள்ளதாக ஏபிவிபி-யின் தலைவர் சக்தி சிங் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி சக்திகள் நாட்டை பிளவுபடுத்த காத்திருப்பதாகவும் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், சாவர்க்கர் ஆகியோர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

படிக்க:
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

“24 மணி நேரத்துக்குள் சிலையை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம்” என NSUI தலைவர் அக்‌ஷய் லக்ரா அறிவித்திருக்கிறார். நடைபெற இருக்கும் மாணவர் சங்க தேர்தலை மனதில் கொண்டே இத்தகைய திட்டத்தை ஏ.பி.வி.பி. போட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“சாவர்கரின் சிலையை நிருவி அவரை முக்கியமான சுதந்திர போராட்ட வீரராக சித்தரித்து வரலாற்றை மாற்றி எழுதும் வேலையை ஏபிவிபி – ஆர்.எஸ்.எஸ். செய்துகொண்டிருக்கிறது. பகத் சிங் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் மதவாத அரசியலுக்கு எதிராகவும் இருந்தவர். மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச அரசை இந்தியாவில் கட்டமைக்க தன்னுடைய வாழ்க்கையை கொடுத்தவர். அதே சமயத்தில் பிரிட்டீஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொண்டிருந்தவர் சாவர்கர்” என்கிறார் AISA -வின் தலைவர் கவல்ப்ரீத் கவுர்.

“சாவர்கரின் இந்து ராஷ்டிரத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பகத் சிங், சுபாஷ் சந்திர போசுடன் அவரை இணைத்துள்ளது ஏபிவிபி. சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் -ன் துரோகத்தை மறைக்க போலி தேச பக்தர்களை அவர்கள் உருவாக்க நினைப்பதையே இது காட்டுகிறது” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஏபிவிபி சர்வ சுதந்திரமாக சிலை நிறுவியது குறித்து வெளிப்படையாகவே கள்ள மவுனம் சாதிக்கிறது டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம்.

கலைமதி
நன்றி:  த வயர்.