“இதற்கு காரணம் காற்று மாசுபாடு, அப்புறம் இந்த பீசா பர்க்கர் போன்ற உங்களுடைய மேற்கத்திய உணவுமுறையும் தான்” என்று என்னுடைய பதிலுக்குக் கூட காத்திராமல் என்னுடைய மாமா கூறினார். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் ஏன் வருகிறது என்று அவர் என்னிடம் கேட்டிருந்தார் அவர். “தீர்வு ஏதாவது கண்டறிந்து உள்ளீர்களா?” என்று என்னிடம் கேட்டுவிட்டுத்தான் மேற்கண்ட பதிலையும் சொன்னார்.
நான் அவரை குறை சொல்லவில்லை. அவரது சகோதரி – என்னுடைய அம்மா கடைசி கீமோதெரபி சிகிச்சையை சமீபத்தில்தான் முடித்திருந்தார். எனவே இக்கேள்விகளைக் கேட்பதற்கான அவரது வாய்ப்பு இது.
இந்தியாவில் நாங்கள் வளரும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களையும் இதய அடைப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தோம். புற்றுநோய் என்பது ஒருசிலருக்கு வரும் மர்மமான நோயாகத்தான் இருந்தது.
1990-களில் போலியோ போன்ற நோய்கள் பெரும் மரணங்களை ஏற்படுத்தி நம்மை கவலையடையச் செய்தன. இந்தியாவின் சுகாதார கொள்கைகளும் அந்நோய்களுக்கு கவனம் செலுத்தி சரியாக உருவாக்கப்பட்டிருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதோ என்னுடைய உறவினரோ அல்லது குடும்பத்திற்கு தெரிந்தவரோ, ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து கொண்டே இருப்பது போல தெரிகிறது. பிறகு, போன ஆண்டின் கடைசியில் ஒருநாள் என்னுடைய அம்மாவிற்கும் கருப்பை புற்றுநோய் இருப்பதாக ஒரு அதிர்ச்சியான செய்தி எனக்கு வந்தது.
நான் அவரை சந்தித்த நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வெள்ளம் போல கேள்விகள் வந்தன. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்சியாளராக அப்போது நான் இருந்தேன். என்னுடைய மாமா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட பலருக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் புற்றுநோயோடு போராடிக் கொண்ருப்பது தெரியும்.
படிக்க:
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்
இது உண்மையா? முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமா? அல்லது சிறப்பான மருத்துவ முறை மற்றும் செலவு செய்யும் திறன் மேம்பட்டதால் இது சாத்தியமானதா?
இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் புற்றுநோய் வளர்ச்சியை அளவிட அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளை ஒப்பிடுவதுதான் சரியான தொடக்கப்புள்ளி. மூன்றில் ஒரு அமெரிக்கர் தன்னுடைய வாழ்நாளில் புற்று நோய்க்காக சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று 2015-ல் ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் இந்த அளவு மிகவும் குறைவு. 120 கோடி மக்களில் ஒரு பத்து இலட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்.
எனினும், 1990-க்கும் 2016-க்கும் இடையில், இரு நாடுகளின் தகவல்களை பார்ப்போம். இந்தியாவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் புற்றுநோய் மூன்று இடங்கள் முன்னேறி இருப்பதை நீங்கள் காண்பீர்கள், ஆனால் அமெரிக்க பட்டியலில் அது இல்லை. இந்த அளவில் மட்டும் நம்முடைய உள்ளணர்வு சரியானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கத்தான் செய்கிறது.
ஆனால் இதுவே முழுமையான சித்திரமல்ல. பெருகி வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்கும் இறப்புகளுக்கும் என்னுடைய மாமா சொல்வது போல மேற்கத்திய உணவு அல்ல பெரிய காரணம். உண்மையில் இறைச்சியை விட புகை பிடிப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் தான் இந்தியாவில் அதிக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் வாழ்நாள் அதிகரிப்புடன் அதற்கு தொடர்பிருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அடிப்படையில் வயதாக ஆக ஏற்படும் மரபணு சார்ந்த ஒரு நோய்தான் புற்றுநோய். நம்முடைய வாழ்நாளில் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் தொடர்ந்து செல்கள் நிரப்பப்படுகிறது. செல்கள் மீண்டும் மீண்டும் பிளவுபடுவதால் இது சாத்தியமாகிறது. ஒவ்வொறு முறையும் செல்கள் பிளவுற்று டி.என்.ஏ நகல்களை உருவாக்குகின்றன. இச்சமயத்தில் மரபணுவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மரபணு பிறழ்வு (mutation) என்றழைக்கிறார்கள்.
இப்பிறழ்வுகள் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை மற்றும் பல்வேறு உயிரியல் வழிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில், இந்த மரபணு பிறழ்வானது கட்டுப்பாடில்லாமல் செல்களை தொடர்ந்து பிளவுபடுத்துகிறது. இவை தான் புற்றுநோய் செல்கள் ஆகின்றன. இவை நம்முடைய உறுப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆகின்றன. உறுப்புக்குக் கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் இந்த செல்களால் எடுத்துக்கொள்ள முடியும், உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை குறுக்கிட்டு முடக்க முடியும். மேலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. இந்த சுயநல புற்றுநோய் செல்கள் ஒருபோதும் மரிக்க விரும்புவதில்லை என்பதுதான் புற்றுநோயின் முரண்சோகம்.
படிக்க:
♦ நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்
♦ குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !
உயிரினங்கள் அதிக காலம் வாழும் போது, வயது ஆக ஆக, நம்முடைய செல்களில் சிலவற்றில் மரபணு பிறழ்வினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தோராயமாக 37 டிரில்லியன் செல்கள் நம்முடைய உடலில் இருக்கின்றன. இத்துடன் வயதாக ஆக புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது. இது ஒன்றும் வியக்கும்படியானதோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அல்ல . 1950-களிலிருந்து இது நமக்கு தெரியும். ஆயினும் விளைவுகளை இப்போதுதான் நாம் எதிர்கொள்கிறோம்.
1990 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 50 (வயது) க்கும் கடைசியிலிருந்து 70 (வயது)க்கும் நடுப்பகுதி வரை நம்முடைய வாழ்நாள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கிறது. தொற்று நோய்களை தடுக்க நாம் எடுத்த கடுமையான முயற்சிகள், சிறந்த குழந்தை பராமரிப்பு, சிறப்பான சுகாதார வசதி மற்றும் போலியோவிற்கு எதிரான வெற்றிகரமான செயல்பாடுகள் இதற்கு முதன்மையான காரணம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
புற்றுநோய் ஆய்வு மற்றும் அதற்கான மருத்துவத்திற்காக இப்பொது அதிகமாக செலவு செய்யாவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் அது அதிகரிப்பதை நாம் தொடர்ந்து பார்க்க நேரிடும். புற்றுநோயை கண்டறிவதிலும் அதற்கான மருத்துவத்திலும் நாம் முன்னேறாவிட்டால் இதே போக்குதான் தொடரும்.
எதிர்காலத்தில் ஒரு பெறிய அளவிலான செலவை தவிர்க்க விரும்பினால், புற்றுநோய் வருவதற்கு முன்பே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய் பாதிப்புகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து தப்பியவர்கள் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. புற்றுநோயை கண்டறிதலிலும் அதற்கான மருத்துவத்திலும் அடைந்த மிகப்பெரிய முன்னேற்றத்தினால் இது சாத்தியமானது.
சீனாவைப் போலவே இந்தியாவும் புற்றுநோய் மருத்துவத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலமும், HPV போன்ற தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமும், முன்கூட்டியே புற்றுநோய் கண்டுபிடிப்பிற்கான முதலீடு செய்வதன் மூலமும் வரக்கூடிய பத்தாண்டுகளில் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். இந்தியாவில் புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதன் மூலம் இந்திய மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
என்னுடைய அம்மாவுக்கு மிகவும் அரிதான முதற்கட்ட கருப்பை புற்றுநோய் இருந்தது. ஆனால் இது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால் இதற்கு மருத்துவம் பார்க்க முடிந்தது. அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரப்பிக்கு பிறகு ஓராண்டாக அவர் நலமாய் உள்ளார். தனியார் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது சாத்தியமில்லாதது.
நமது சட்டைப் பையிலிருந்து பணத்தை ஆட்டையைப் போடும் அரசாங்கம், புற்று நோயைத் தடுக்கவா பணத்தைச் செலவழிக்கப் போகிறது?
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்