அசோக் லேலாண்ட் -ல் மிகை உற்பத்தி ! வேலை நாட்களைப் பறிக்கும் சதியை முறியடிப்போம் !

ன்பார்ந்த தொழிலாளர்களே !

இலாபத்தை தின்னது, நிர்வாகம்! வயித்து வலி மருந்து தொழிலாளிக்கா?

சோக் லேலாண்ட் நிர்வாகம் உலகமயமாக்கத்திற்கு பிந்தைய 26 ஆண்டுகளின் உற்பத்தியை சாரமாக பார்த்தால் லேலாண்டின் மிகை உற்பத்தி கொள்கையை புரிந்து கொள்ள முடியும். தேவையை விட அதிகமாக தின்றால் வயிற்று வலி ஏற்படும் என்பது எப்படி இயற்கை விதியோ முதலாளித்துவ மிகை உற்பத்தியால் சந்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகை உற்பத்தி செய்து பெருவாரியான வாகனங்களை சந்தையில் தள்ளியுள்ளது. மிகை உற்பத்தியால் தற்காலிக தேக்கத்தை சந்தித்து நிற்கிறது,ஆட்டோமொபைல் சந்தை!

ஆண்டு உற்பத்தி வர்த்தகம் இலாபம்
1993 – 94 24,226 வாகனங்கள் 1,181 கோடி 35 கோடி
2003 – 04 48,654 வாகனங்கள் 3,527 கோடி 194 கோடி
2018 – 19 1,97,366 வாகனங்கள் 29,165 கோடி 1,983 கோடி
2016 – 19 (3 ஆண்டு) 5,17,305 வாகனங்கள் 77,327 கோடி 4,923 கோடி

ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்திற்கு பிரதான காரணம் சந்தையை கணக்கில் கொள்ளாத, இலாபத்தை மட்டும் மையமாகக் கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்தி கொள்கையே ஆகும்.

ஆட்டோமொபைல் வீழ்ச்சி, பொருளாதார மந்தம்: மத்திய அரசின் சதித்திட்டம்!

narendra-modi-gstமற்றொருபுறம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியானது சிறு குறு முதலீட்டாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட பலமுனைகளில் திட்டமிட்டு கார்ப்பரேட் கும்பலை வாழவைக்க இடையறாது வேலை செய்து வருகிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம் முதல் GST வரிக் கொள்கை, விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை தீர்மானிக்காமல் இருப்பது, 44 தொழிலாளர் சட்டங்களை குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் சட்ட திருத்தங்கள் என்று தடாலடியாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு உள்நாட்டு மக்களின் தொழில்களை பறித்து கார்ப்பரேட் கொள்ளையரிடம் தாரை வார்க்க செயல்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. காவிகள் தீவிரப்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கை பெருவாரியான ‘சூத்திரவாளை’ குறிவைத்தே நகர்த்தப்படுகிறது. மக்களின் பொருளாதாரம் மீட்சியடையும் என்பதற்கு எந்த அடிப்படையுமில்லை.

*மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை, முதலாளிகளின் மிகை உற்பத்தி கொள்கை இரண்டு காரணங்களால் இன்று நாடு பொருளாதார மந்தம், ஆட்டோமொபைல் வீழ்ச்சி என்று வீழ்ந்து கிடக்கிறது.* இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக வேலை நாட்கள் – குறைப்பு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு -ஆலை மூடல் என்று தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

அசோக் லேலாண்டில் மட்டும் முதலாளித்துவத்தின் நிபந்தனையற்ற உற்பத்தியால் 2017-ம் ஆண்டு வாரத்தில் 6-வது வேலை நாளை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டது, தற்போது சந்தை நிலைமையைக் காட்டி வாரத்தில் ஐந்தாவது நாள் வேலைகளையும் பறிக்கத் திட்டமிட்டு போனஸ் வழங்காமல் சங்கத்தை நிர்ப்பந்திக்கிறது, லேலாண்டு நிர்வாகம்.

தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்தின் தியாகம் செறிந்த போராட்ட வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, கார்ப்பரேட் நிர்வாகத்திடம் நடப்பு காலாண்டில் இலாபம் குறைந்த கதையை கேட்டுக்கொண்டு தொழிலாளர் வாழ்நிலையை மறந்து விட்டனர். இதனால் வேலை நாள் பறிப்பு, உற்பத்தி உயர்வு – உள்ளிட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

ashokleylandஅசோக் லேலாண்டின் லாபம் குறைகிறது என்று சட்டவிரோதமான வேலைநாட்கள் குறைப்புக்கு முன் தொழிற்சங்கங்கள் சரணாகதியாகிவிட்டது. இதனால் ஒசூரில் பிற ஆலை நிர்வாகங்கள் இதையே முன்னுதாரணமாக காட்டி பல விதமான அடக்குமுறைகளை ஏவி வருகின்றன.

காண்ட்ராக்ட், தற்காலி தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். பணியில் இருப்பவர்களில் மாதத்தில் சரிபாதி வேலை நாட்கள் பறிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் மொத்த தொழிலாளர்களும் உரிமை பறிப்புக்கு எதிராக அரசியல் எழுச்சி ஏற்படுத்த வீதியில் திரளவேண்டிய தேவை முன் வந்துள்ளது.

படிக்க:
♦ அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

முதலாளித்துவத்தின் லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கையால் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. ஆகையால், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைக்கும் முதலாளித்துவ இலாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கைக்கும் ஓர் முடிவு கட்டினால் தான் சிறு – குறுந்தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும். மக்கள் கையில் பணப்புழக்கம் ஏற்படும். மக்கள் வாழ முடியும். தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் கூட பாதுகாக்க முடியும் என்பது தற்போது வெளிச்சமாகி விட்டது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – அணிகள்,
அசோக் லேலாண்ட் – 1 & 2 , ஒசூர்.
தொடர்புக்கு : 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க