Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியா#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !

#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !

நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.

-

வாகனத்துறை விற்பனை வீழ்ச்சிக்கு இன்றைய தலைமுறையினர் மாதாந்திர தவணை கட்ட பயந்து ஓலா, உபேர் பயன்படுத்துவதே காரணம் என சங்கித்தனமான விளக்கத்தை அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சங்கிகளின் சிந்தனை நூற்றாண்டு பழமையானது என்னும்போது, எவ்வளவு படித்தாலும்; எவ்வளவு உயர்ந்த கல்லூரிகளில் படித்தாலும் வளரவே வளராது என்பதற்கு நிர்மலா சீதாராமன் ஆகச்சிறந்த உதாரணமாகிவிட்டார்.

நிர்மலாவின் விளக்கத்துக்கு புதிய விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் மூத்த சங்கி நிதின் கட்கரி, பார்க்கிங் கட்டணத்தை தவிர்க்கவே வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்ப்பதாக கூறியுள்ளார். இதில் யார் சொன்ன ‘விளக்கம்’ மிகவும் முட்டாள்தனமாக உள்ளது என தனி போட்டியே நடத்தலாம்.

மத்திய அமைச்சர்களின் பொருளாதார மந்தநிலை விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் #BoycottMillenialls மற்றும் #SayItLikeNirmalaTai போன்ற ஹேஷ்டேக்குகளில் சங்கி அமைச்சர்களுக்கு மேலும் சில ‘யோசனை’களை வழங்கினர்.

வீடு விற்பனை சரிந்துள்ளது காரணம் அனைவரும் ஆன்லைனிலேயே வசிப்பதுதான் என்கிறார் சுகதா.

தாக்‌ஷில் ஷெட்டி: காய்கறி விலை ஏறுகிறது காரணம் இன்றைய தலைமுறையினர் சப்ஜிக்கு பதிலாக பப்ஜியை விரும்புகின்றனர்.

பிரசாந்த் சாக்கியா: கோக், பெப்சி விற்பனை சரிந்துள்ளது! காரணம் இன்றைய தலைமுறையினர் பசு மூத்திரத்தை குடிப்பதுதான்.

படிக்க:
காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !
♦ கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ?

அன்கூர் சத்தா: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது காரணம் இன்றைய தலைமுறை வேலைக்கு போவதற்கு பதிலாக டிக் டாக்கைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சிவம்: ஓலாவும் உபேரும் வாகன துறையின் மந்தநிலைக்குக் காரணம் எனில், ஆடை உற்பத்தி துறையின் வீழ்ச்சிக்கு நாகா சாதுக்கள் காரணமா?

Wise Posterior: ஃபேர் அண்ட் லவ்லி விற்பனை சரிவு, ஏனெனில் வாழ்க்கையே அன்ஃபேர் ஆக(மோசமானதாக) உள்ளது.

சாந்தனு சிங்: விமானத்துறை மந்த நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏனெனில் இன்றைய தலைமுறை இப்போதுதான் அலாவுதீன் படத்தைப் பார்த்து கார்பெட்டில் பறந்துகொண்டிருக்கிறது.

சர்தாரிசம்: ஈர்ப்புவிசை காரணமாகவே இந்திய ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது.

அனிஷா தத்தா: இன்றைய தலைமுறை உள்ளாடைகள் அணிவதை நிறுத்திவிட்டதால், உள்ளாடை விற்பனை குறைந்துவிட்டது. இந்த தலைமுறை புறக்கணியுங்கள்.

சஞ்சய் ஜா: காஷ்மீர் முடக்கத்தால் ஆப்பிள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆப்பிள்11 போனின் விலை அதிகமாக உள்ளது.

ஸ்ரீவத்சவா : நம்முடைய நிதியமைச்சர் வாட்சப் பல்கலையில் ரேங்க் வாங்கியவராக இருப்பார். பொருளாதார வீழ்ச்சி, அரசாங்கத்தின் தவறா, தனிநபர்களின் தவறா? அடுத்த முறை நிர்மலா, இப்படியும் சொல்வார், மக்கள் வேலைக்கு செல்ல விரும்புவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை பெருகுகிறது!

தமிழ் முகநூல் பதிவர்களும் ட்விட்டரில் வந்த பலர் பகடிகளை எடுத்து பகிர்ந்திருந்தனர். பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்கிற பிம்பம் உடைவதாகவும் பலர் எழுதினர்.

“பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பார்ப்பனர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பதும், வேத காலத்துக் காட்டுமிராண்டிகள் என்பதும் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.” என்கிறார் பாலச்சந்திரன்.

கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கி வைத்த பொருளாதார சீரழிவை இந்த ஆட்சி காலத்தில் அனுபவிக்க வைத்துவிட்டது மோடியின் அரசாங்கம். மந்தநிலையை சீராக்குவதற்கு பதிலாக, தனது அறிவிலித்தனத்தை காட்டும் விளக்கங்கள் மூலம் மோடியின் அமைச்சர்கள் உளறிக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாத சமூகம், அறிவிலிகளை பகடி செய்துகொண்டிருக்கிறது.


 கலைமதி
நன்றி: தி வயர்.