பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

போட்ட காசக் கூட எடுக்க முடியல … பத்துநாள் வித்தா இருபதுநாள் கீழ கொட்ட வேண்டிய நிலைமை வருது.

25 வருசமா பூ வியாபாரம் பன்றேன். இந்த பத்துவருசத்துலதான் பூ இவ்ளோ வீழ்ச்சியடைஞ்சிருக்கு. பண்டிகை காலங்கள்ல எவ்ளோனாலும் விலை கொடுத்து வாங்கிடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கு சாமந்தி கிலோ 200 ரூபாய்க்கு வித்துச்சி. இன்னிக்கு பத்து ரூபாய்க்கு வாங்க ஆளில்லை. பூவை கீழே கொட்டிக்கிட்டு இருக்கோம். கீழ கொட்டினாலும் அள்ள ஆளில்லை. இதனால விவசாயிங்களுக்குத்தான் பிரச்சினை. ஏற்கெனவே நலிஞ்சி போயிருக்காங்க. இதனால திரும்ப விவசாயம் செய்யாம விட்டுருவாங்க. திரும்ப விலை ஏறும்.

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. வாரம் ஐயாயிரம் நாலாயிரம் வீட்டுக்கு அனுப்பிடுவேன். புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான்.

சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் – கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

பாருங்கள்! பகிருங்கள்!!


படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க