Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாடெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !

டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !

தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.

-

டந்த ஞாயிற்றுக்கிழமை வட இந்தியாவில் காற்றில் நச்சின் அளவு பேரழிவு நிலையை எட்டியது. தேசிய தலைநகரமான டெல்லியின் மாசு அளவைக் கணக்கிடும் பத்து கண்காணிப்பு நிலையங்கள், நச்சு அளவு ஆபத்தான நிலையைவிட பல மடங்கு உயர்ந்ததாகக் கூறின.

நச்சு காற்றால் மக்களின் பொதுவாழ்க்கை முடங்கிய நிலையில், #DelhiAirEmergency, #DelhiPollution, #DelhiBachao ஹேஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின. ஆனால், டெல்லியில் அமர்ந்து ஆட்சி செய்யும் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் டெல்லியின் நச்சுக் காற்று குறித்து வாயைத் திறக்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஞாயிறு காலை தனது ட்விட்டர் பதிவில், இந்தியர் தங்களுடைய நாளை நல்ல இசையைக் கேட்டு துவங்க வேண்டும் என்கிறார். ரோம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, பிடில் வாசித்த நீரோ மன்னன் வரலாற்று சம்பவம் நினைவுக்கு வருகிறதல்லவா? காவிகள் எத்தகைய சாடிஸ்டுகள் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை!

ஜவடேகரின் ட்விட்டை பாஜக-வுக்கு ஓட்டுப்போட்டவர்கள்கூட சாடிவிட்டுச் சென்றுள்ளனர். தலைநகர் டெல்லியின் மாசு அளவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தை மூன்று முறை ஒத்திவைத்திருக்கிறார் இந்த அமைச்சர். இதுதான் பாஜக அரசின் சுற்றுச்சூழல் காக்கும் லட்சணம் என அதற்கான ஆதாரங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

மாண்புமிகு சுகாதார துறை அமைச்சராவது, தங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு விசுவாசமாக மக்கள் பணியாற்றினாரா? கேரட் சாப்பிடுங்கள், மாசு தொடர்பான பிரச்சினை அது தீர்க்கும் என்கிறார் அவர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சுனில் பராலா ‘புராண கால’ தீர்வொன்றை சொல்கிறார். விவசாயிகள் அறுவடை முடிந்து, பயிர்களை எரிப்பதே, காற்றில் அதிகப்படியான நச்சு கலக்க காரணம் என சொல்லப்படும் நிலையில், அது இயற்கை அமைப்பின் பகுதி என்றும், அதை விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது எனவும் சொல்கிறார் அவர்.

அதற்கு தீர்வாக, மழைக்கடவுளான இந்திரனை குளிர்விக்க அரசாங்கங்கள் ‘யாகம்’ வளர்க்க வேண்டும் என யோசனை கூறுகிறார் அவர்.

கேரட்டும், யாகங்களும் மட்டும் உதவாது என நம்புகிற அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு மூளையாக இருக்கும் நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கந்த் தனது திட்டத்தைக் கூறுகிறார்.

டெல்லியில் மாசு வாழ்க்கையிலிருந்து தப்பிக்க, ‘கடவுளின் சொந்த தேசமான’ கேரளத்தில் தனது ஓய்வு காலத்தை கழிக்க விரும்புவதாகக் கூறுகிறார் அவர்.

‘கூட்டாட்சியின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையலாம்’ என்ற நிதி ஆயோக்கின் தாரகமந்திரமே, வட இந்திய மாசு கட்டுப்பாட்டுக்கு செய்ய வேண்டியதாகும். ஒரு குறிப்பிட்ட மாநிலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முக்கியமான அதிகாரி ஒருவர், இப்படி கேரளத்துக்கு தப்பி ஓடுவேன் என பதிவிட்டிருக்கிறார்.

டெல்லியின் காற்று மாசு அளவு, பாதுகாப்பான அளவைவிட 30 – 40 மடங்கு அதிகமாகியுள்ள நிலையில், மோடி – அமித் ஷா – ஹர்ஷ்வர்த்தன் போன்றவர்கள் மவுனமாக உள்ளனர் என நியூயார்க் டைம்சின் பத்திரிகையாளர் கேள்வி கேட்டுள்ளார்.

மாண்புமிகு அமைச்சர்கள், அதிகாரிகள் வட மாநிலங்களின் மாசு பிரச்சினையிலிருந்து நழுவிக்கொண்டு ஓடிய நிலையில், பிரதமர் மோடி இதுதான் இந்தியாவில் இருக்க சரியான தருணம் என்கிறார்! அதையும் முழு நம்பிக்கையோடு சொல்கிறாராம்!

ஒருபக்கம் பொருளாதார வீழ்ச்சி, இன்னொரு பக்கம் தலைநகரில் டெல்லியில் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டிருக்கும் அதீத மாசு… இந்தச் சூழ்நிலையில் முதலீடு செய்ய யார் வருவார்? எதற்காக இந்த பிரதம அமைச்சர் ஊர் ஊராகச் சுற்றி, வரவே முடியாத வீட்டுக்கு விருந்தாளிகளை அழைக்கிறார்?


அனிதா
நன்றி : ஸ்கரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க