இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர் மற்றும் கணையாழி ஆசிரியர் ம.ராசேந்திரன் அவர்கள் கட்டுரை எதிர்கால இந்தியக் கனவை இந்தியா சந்திக்க இருக்கும் சவால்களை ஆற்றலை அபிவிருத்தி செய்ய ஒற்றுமையை வளர்த்தெடுக்க மொழியை முக்கிய கருவியாக ஆட்சியாளர்கள் கட்டமைக்க முனைவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை விளக்குகிறது.
… பேராசிரியர் மாடசாமி, பாலகர்கள் பத்திரம் என்ற தன் கட்டுரையில் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள இந்துத்துவ அரசியலை அதன் ஆபத்துகளை பழமையை விதந்து ஓதுவதில் பொதிந்து கிடக்கும் மநுதர்ம சூழ்ச்சிகளை பட்டியலிடுகிறார். … வயது வந்தோருக்கான கல்வியை பாடத்திட்டத்தை எப்படி அணுகுவது மற்ற பாடத்திட்டங்களில் இருந்து எப்படி வேறுபட்டு இருக்கிறது. அதற்கு தக்கவாறு அதனை அணுகாமல் அந்தப் பிரச்சினையின் தன்மையே புரியாமல் எந்திரத்தனமாக உள்ள முன் மொழிவுகளை விமர்சிக்கிறார்.
… மனித உரிமைகள் செயல்பாட்டாளரும் கல்வியாளரும் மதுரைக் கல்லூரி முன்னாள் முதல்வருமான என்.முரளி அவர்கள் புதிய கல்விக் கொள்கை ஓர் தேன் தடவிய விஷம் என்கிறார். … இந்த கல்விக் கொள்கை அமுலாக்க பெற்றால் இனி எந்தக் காலத்திலும் கல்விக் கொள்கை தேவை இருக்காது என்கிறார்.
பேராசிரியர் ஆர்.இராமானுஜம், இந்த வரை கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் – போன்று காட்சியளிப்பவற்றை முதலில் சிலவற்றை பட்டியல் இடுகிறார். பின்னர் தனக்கேயுரிய ஆழ்ந்த கல்விப் புல தெளிவ செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு “இந்த வரைவு ஆவணத்தின் குறைபாடுகள்/ தோல்விகள் என்று பட்டியிலிட்டதைப் படிக்கும் போது இந்த புதிய கல்விக் கொள்கை கொடுங்கனவு பலித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறது.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களின் நேர்காணல் இதில் இடம் பெற்றுள்ளது. அது இந்தித் திணிப்பின் பல்வேறு நியாயங்களை கேள்விகளாக அடுக்கிய போதும் அதன் தேவை இன்மையையும் வலுக்கட்டாயமாக திணிக்கும் அத்தியாவசியங்களையும் மிகவும் நுணுக்கமாக தோலுரித்து காட்டுகிறார். நேர்காணலின் இரண்டாம் பகுதியில் பள்ளிக் கல்வி உயர், கல்வி ஆகியவற்றில் நிகழவிருக்கும் ஆபத்துகளை நேர்பட எடுத்துக் கூறுகிறார். வரைவு கல்விக் கொள்கை எப்படி இந்திய அரசியல் சாசனத்திற்கு சமூக நீதிக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள பயன்படுகிறது.
ஆயிஷா நடராசன் கட்டுரை இந்திய கல்வி வரலாற்றை மட்டுமல்ல அடிமை இந்தியாவில் எப்படி இருந்தது? உழைப்பாளி மக்கள் பார்வையில் கல்விக் கொள்கையை எப்படி அணுகுவது? முதலாளித்துவம் எவை எவற்றையெல்லாம் கல்விக் கொள்கை என்று மக்கள் தலையில் திணிக்கும் என்பதையும் முன் பகுதியில் கூறிவிட்டு, வரைவு கல்விக் கொள்கை முன் வைக்கும் முக்கிய பரிந்துரைகளை தனித்தனியாக எடுத்துக் காட்டி அதன் விளைவுகளை பொருத்தமான கேள்விகளாக வாசகர்கள் முன் வைக்கிறார்.
… கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் ப.சிவக்குமார் கட்டுரையும் ஓர் முக்கிய பங்களிப்பு. இந்துத்துவவாதிகள் நாலந்தா பல்கலைக்கழகம் மற்றும் தக்க்ஷசீலா ஆகிய பல்கலைக் கழகங்களை வைத்து பேசி வரும் பழம் பெருமையை உடைத்தெறிகிறார்.
… ஏற்கனவே உயர் கல்வி துறையில் இருந்த குறைந்த பட்ச ஜனநாயக நிறுவனங்கள் கூட வரைவு கல்விக் கொள்கை வழியாக மூடப்பட்டு சர்வ அதிகாரங்கள் மிக்க இரண்டு நிறுவனங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அது எவ்வாறு உயர் கல்வியை மக்கள் நலனை பாதிக்கும் என்பதையும் இந்திய உழைப்பாளி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் தன் ஆலோசனைகளை தருகிறார்.
கலகல வகுப்பறை சிவாவின் கட்டுரை இந்த வரைவு கலவிக் கொள்கையின் ஓர் முக்கிய முரண்பாடை சுட்டுகிறது. இந்தியா முழுவதும் விரவிக் கிடக்கும் எழுத்தறிவு எண்ணறிவு இன்மையின் பரிதாபகரமான நிலைய வரைவு கொள்கையே சுட்டிக் காட்டி விட்டு ஏற்கெனவே உள்ள நிலைக்கு தாரம் தேடாமல் இன்னும் ஏராளமான மொழிகளை கற்கும் திறன் குழந்தைக்கு உண்டு என்று கூறுவது நகைமுரண் என்கிறார்.
சுமார் தொண்ணூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த கல்வியாளர் கல்விச் செயல்பாட்டாளர்களின் ஆகர்ஷ சக்தி எஸ் எஸ் இராச கோபாலன் அவர்கள் கட்டுரை மிக மிக சுருக்கமானது ஆனால் மிக்க ஆழமானது. இந்த வரைவுக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்தை சுருக்கமாக குப்பை என்கிறார். இதை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்க தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார்.
அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராஜமாணிக்கம் வரைவுக் கல்விக் கொள்கையின் அறிவியல் தொழில்நுட்ப அறிவியல் மனப்பாங்கு ஆகிய பகுதிகளில் உள்ள அபத்தங்களின் மூலம் எது என்பதை தொட்டுக் காட்டுகிறார். ஆபத்துகளை கூறி எச்சரிக்கை செய்கிறார்.
தொகுப்பாளனாகிய எனது கட்டுரை இந்த வரைவுக் கல்விக் கொள்கை இந்திய கல்விக் கொள்கையாக வடிவாக்கம் பெற்றால் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கிறது. அத்தோடு ஏன் இந்த வரைவுக் கல்விக் கொள்கை அறிவியல் பூர்வமானது அல்ல என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவ முயன்றுள்ளேன். அரசியல் பின் புலத்தையும் அடையாளம் காட்ட முனைந்து உள்ளேன். (தொகுப்புரையிலிருந்து…)
படிக்க:
♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
♦ அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
அரசியல் சட்ட முகமனில் கூறப்பட்டுள்ள சோசலிசத்திற்கு முற்றிலும் மாறுபட்டது வரைவறிக்கை. சமத்துவம், சமநீதிக் கொள்கைகளை முற்றிலும் நிராகரிப்பதே பல தேர்வுகள். தேர்வுகளின் முக்கிய நோக்கம் விலக்கலே என்பதை கடந்த கால அனுபவங்களினின்று அறிகின்றோம். உயர்கல்வியில் சேர பரிந்துரைக்கப்பட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வு பெரும்பாலான மாணவர்க்கு உயர்கல்வியை மறுக்கக்கூடும். படித்த பெற்றோரோ, வீட்டில் கல்விச்சூழலோ இல்லாத மாணவர் கடும் உழைப்பின் மூலம் முன்னேறுகின்றார். அவர் ஓட்டத்திற்குத் தடைக்கல்லாகும் நுழைவுத் தேர்வுகள்.
ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை. (நூலிலிருந்து பக்.36-37)
நூல் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?
(தேசிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்)
ஆசிரியர்கள் : எஸ்.எஸ். ராஜகோபாலன், ச. மாடசாமி, பொ.இராஜமாணிக்கம், ப.சிவகுமார், ஆர்.ராமானுஜம், நா.மணி, இரா.முரளி, ம.ராசேந்திரன், சிவா, பிரின்ஸ் கஜேந்திரபாபு, ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், அ.மார்க்ஸ்
தொகுப்பு : பேரா.நா.மணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924 | 2435 6935
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com
பக்கங்கள்: 120
விலை: ரூ 80.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
இணையத்தில் வாங்க : commonfolks | thamizhbooks