Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஅர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !

அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !

‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 'அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதையும் செய்து விடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம்.

-

ம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் முன்வைக்கும் அச்சுறுத்தலைக் கையாள்வதோடு, ‘நகர்ப்புற நக்சல்களுக்கு’ எதிராக  செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எஃப்.) வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.

“அடுத்த ஆறு மாதங்களில் இடதுசாரி தீவிரவாத செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள மற்றும் தீர்க்கமான பிரச்சாரத்தை சி.ஆர்.பி.எஃப். செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்று அமித் ஷா கூறினார்.  மேலும் துணை இராணுவப் படையினரை “நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு” எதிராக செயல்படும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமித் ஷாவின் பேச்சு குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களில் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு பயனுள்ள மற்றும் தீர்க்கமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் சி.ஆர்.பி.எஃப்.-க்கு அறிவுறுத்தினார். நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துகிறவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்பு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சி.ஆர்.பி.எஃப். தலைமையகத்திற்கு அமித் ஷா சென்றிருந்தபோது மேற்கண்ட விசயங்களைப் பேசியதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற வார்த்தை மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் உட்பட பலதரப்பட்ட கருத்தியலாளர்களை குறிப்பிட  வலதுசாரி கருத்தியலாளர்களால்  உருவாக்கப்பட்டது. அவர்கள் எதிரிகள் என்றும் அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் வலதுசாரி கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

பீமா கோரேகான் வன்முறைக்குப் பின்னர் பல மனித உரிமை ஆர்வலர்கள் அரசால் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றச்சாட்டுகளுடன் அவர்கள் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படிக்க:
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !
என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே

வலதுசாரி கருத்தாளர்கள் உருவாக்கிய சொல்லை அலுவல்ரீதியாக பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் அமர்ந்திருக்கும் மோடி அரசும் பயன்படுத்துகிறது; ‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. ‘அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதைசெய்து விடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். நாம் எப்படி எதிர்வினையாற்றப் போகிறோம்?


கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க