Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஅரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.

-

ந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகள் ரூ. 958 பில்லியனுக்கும் அதிகமாக நிதிமோசடிகளை சந்தித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஏற்பட்ட இந்த இழப்புகளை சரிகட்ட அரசாங்கம் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு மாத காலக்கட்டத்தில் அரசு வங்கிகள் 5,743 மோசடிகள் குறித்து புகார் அளித்துள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலானவை கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தவை என்றும் மாநிலங்களவையில் அவர் தெரிவித்துள்ளார். ரூ. 25 பில்லியன் மதிப்பிலான 1,000 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும் அவர் கூறினார்.

ஆறாண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு வங்கி மோசடிகளை தடுக்க முடியாமல் “வங்கிகளில் மோசடி ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என வெறும் வாய்ச்சவடால் மட்டும் விட்டிருக்கிறார் அமைச்சர் நிர்மலா.

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் செயல்படாத நிறுவனங்களின் 3,38,000 வங்கிக் கணக்குகளை முடக்குவது மற்றும் மோசடி செய்தவர்கள்,  நாட்டை விட்டு வெளியேறியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான  சட்டத்தை இயற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் கூறினார்.

வங்கியாளர்கள் தளர்வான விதிமுறைகளே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சில வங்கி அதிகாரிகள் மோசடி செய்பவர்களுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி மோசடி இழப்புகளை அறிவித்தது. இந்த வங்கி அதிகாரிகள் பல ஆண்டுகளாக நகைக்கடை குழுமங்கள் வெளிநாட்டுக் கடனைப் பெற போலி வங்கி உத்தரவாதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

படிக்க:
மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !
பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

மோடி அரசாங்கம் 2016-ம் ஆண்டில் கடுமையான திவால்நிலை மற்றும் நொடித்துச் செல்லும் சட்டத்தை (bankruptcy and insolvency law) அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் வங்கிகளுக்கு வரவேண்டிய 140 பில்லியன் டாலர் மோசடியில் இருந்து இழப்புகளை மீட்க உதவும் எனக் கூறப்பட்டது.

ஆனால், கடுமையான சட்டங்கள் என சொல்லப்பட்டாலும் இவற்றால் ஒரு ரூபாயைக்கூட திரும்பப் பெற முடியவில்லை. இதுவரை எந்த நிதி மோசடியாளருக்கும் தண்டனை அளிக்கப்படவில்லை. ஆண்டுக்கு நான்கைந்து முறை அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக செய்தி மட்டும் வெளியாகிறது. மோடி அரசின் ‘நீதியாட்சியில்’ நிதி படும் பாடு இதுதான்.


அனிதா
நன்றி : த வயர்