Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகாவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.

-

ண்ணூர்: அண்மையில் சிபிஎம்-மின் பாதுகாப்பின் கீழ் தஞ்சம் புகுந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உதவியாளரின் வெளிப்பாடுகளால், “எது ஒன்றையும் புத்திக்கூர்மையுடன் செய்வோம்” என்று கூச்சலிடும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அக்கிரமங்களோடு அதன் முட்டாள்தனமும் முச்சந்தியில் நிற்கிறது.

சுதீஷ் மின்னி

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.-ஸின் பிரச்சாரகராக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் இருப்பதாகக் கூறும் சுதீஷ் மின்னி, தனது சுயசரிதையான, (நரகசகேதிலே உல்லாரக்கல்) நரகத்தின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்-லில், அவர் நேரடியாக கண்ட பல சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆர்.எஸ்.எஸ்-ன் இரகசிய செயல்பாட்டு மூலோபாயத்தை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎம் வழங்கிய பாதுகாப்பின் கீழ் இப்போது வாழும் சுதீஷ் மின்னி, இந்த புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் வாழ்க்கைக்கான தனது பணி நிறைவேறிவிட்டது என்று கூறுகிறார்.

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் கோட்டையாக அறியப்படும் அயிக்கராவில் வாழும் மின்னி மேலும் கூறுகையில் ”ஆர்.எஸ்.எஸ் ஆண்கள் மற்றும் பிற உயர் சாதி சமூகத்தினரின் தொடர்ச்சியான மிருகத்தனமான தலித் எதிர்ப்பு சித்திரவதைகள், ஆர்.எஸ்.எஸ் உடனான தனது தொடர்பை முடிவுக்கு கொண்டுவர கட்டாயப்படுத்தியது” என்கிறார்.

“குஜ்ஜார் கலவரம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்தபோது, ​​நான் அங்கு பல மாடிகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைமையகத்தில் தங்கியிருந்தேன்..
அப்போது, இரவில் ஒரு இளம் பெண்ணின் அலறலைக் கேட்டேன். பின்னர், ஆர்.எஸ்.எஸ் ஆண்கள் குஜ்ஜார் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நான் அறிந்தேன். அந்த பிராந்தியத்தில் ஒவ்வொரு சமூக அமைதியின்மை நிலவும் போதும், அங்கிருக்கும் உயர் சாதியினரால் இத்தகைய பலாத்காரங்கள் ஒரு சடங்கு போல் நடத்தப்படும்.

படிக்க:
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
♦ தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

பிற மதங்கள் மற்றும் சாதிகள் மீது மேலாதிக்கத்திற்கான போரில் அடியாட்களாக பயன்படுத்துவதற்காக உயர் சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ். “அத்தகைய குழந்தைகளுக்கு வன்முறையை கற்பிப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ் சிறப்பு அனாதை இல்லங்களை நடத்துகிறது. அந்த சிறுமிகளின் கூக்குரல்கள் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்து வாட்டிக்கொண்டிருந்தது”, என்கிறார் மின்னி.

சங்கத்துடன் இணைந்து செயல்பட்ட பல வருட அனுபவத்தின் மூலம், ஆர்.எஸ்.எஸ் என்பது பிராமணர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இந்து உயர் சாதி நிறுவனம் என்பதை மின்னி உணர்ந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் நடத்தப்படும் சடங்குகளில் பிராமணர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதால், தான் ஒரு பிராமணர் இல்லையென்றாலும், ‘புனித நூல்’ அணிந்து கொண்டு அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப் பட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

வேத கணிதத்தில் நிபுணரான மின்னி, பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் பிற மத மையங்களிலிருந்து விவரங்களை சேகரிக்க ஒரு உளவாளியாக பணியாற்றியுள்ளார். எஸ்.எஸ்.டி.பி மற்றும் சிவகிரிக்குள் ஆர்.எஸ்.எஸ் நுழைவதற்கு எளிதான பாதையை அமைப்பதற்காக, அலுவாவில் உள்ள அத்வைதாஸ்ரமத்தை பிடிக்க கடைசி நோக்கம் இருந்தது. “ஆனால் நான் ஆசிரமத் தலைவருக்கு எல்லாவற்றையும் அம்பலப்படுத்திவிட்டு தலைமறைவாகி விட்டேன்,” என்று அவர் கூறினார்.

வகுப்புவாத வெறுப்பை பரப்புவதற்கான ஆர்.எஸ்.எஸ்-ன் உத்திகள், தலித் பெண்களின் இன தூய்மையை மாசுபடுத்தும் சம்பவங்கள், கோத்ரா கலவரத்திற்கான ஏற்பாடுகள், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் இத்தாலிய கைத்துப்பாக்கியுடன் நடத்தப்பட்ட பயிற்சி, சங்க வட்டங்களில் நிலவும் சாதி பாகுபாடு, சங்கபரிவாரத்தில் உயிர்பலியானவர்களின் விதவை மனைவிகள் மீதான பாலியல் சுரண்டல், தாழ்த்தப்பட்ட பெண்களை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்துதல் மற்றும் பலவற்றை இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது.

அண்மையில் கண்ணூரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு நிகழ்ச்சியில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போதிருந்து, ஆர்.எஸ்.எஸ் அவரை குறி வைத்துள்ளது. மேலும் சங்கபரிவாரத்தில் உள்ள அவரது நண்பர்கள், அவரை கொல்ல சதி நடப்பதாக எச்சரித்துள்ளனர்.

மத்தியில் ஆட்சியை வைத்திருப்பதோடு, அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தன்னை பரிசுத்தவானாக காட்டிக் கொள்ள எந்த கீழ் நிலைக்கும் செல்லும்.


மூர்த்தி
நன்றி : டெக்கன் கிரானிக்கல்