வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி

விக்கிற விலைவாசியில காய் - கறி வாங்க முடியாம அல்லாடுறோம்.... இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது... வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? காணொளியை பாருங்கள்... பகிருங்கள்...

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல !

ன்றாடங்காட்சிகளை மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தையும் வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் கருத்து.

* கால் கிலோ வெங்காயம் 18 ரூபா.. 20 ரூபா..ய் விக்குது அதுவும் 3 வெங்காயம் தான் நிக்கும்…  அத வச்சி 4 பேர் இருக்குற குடும்பத்துக்கு குழம்பு வைக்க முடியுமா?

* விக்கிற விலைவாசியில காய் – கறி வாங்க முடியாம அல்லாடுறோம்…. இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது…

* குடிகார புருசன்கள வச்சிகிட்டு வாழ்க்கைய ஓட்டிகிட்டிருக்கோம். நாளொன்னுக்கு நூறு ரூபா இல்லாம ஒன்னுமே பன்ன முடியாது. இதுல வெங்காய விலையே நூறு ரூபாய்க்கு வித்தா என்ன பன்றது?

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க