”ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!” என்ற தலைப்பில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த நவம்பர்-26 அன்று கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் குணசேகரன், வழக்கறிஞர் ஜெகதீசன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் தனபால் மற்றும் பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
♦ வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.
தொடர்புக்கு : 96298 86351.