தண்ணீரில் பாலைக் கலந்து பார்த்திருப்பீர்களா ?
உ.பி சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைஅக்ள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு மதிய உணவாக பால் கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது உ.பி. அரசு. அதன் படி ஒரு லிட்டர் பாலை மட்டும் வைத்து அப்பள்ளியில் படிக்கும் 81 மாணவர்களுக்கும் பால் கொடுப்பது சாத்தியமா ? அதை சாத்தியமாக்கியிருக்கிறது ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு. ஒரு குண்டா தண்ணீரில் ஒரு லிட்டர் பாலைக் கலந்து காய்ச்சி 81 மாணவர்களுக்கு சத்துணவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
மாட்டுக்கு லட்டை ஊட்டும் ரவுடி சாமியார், மாணவர்களுக்கு சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக் கொள்ளக் கொடுக்கிறார். பாலிற்குப் பதிலாக தண்ணீரை உட்கொள்ளக் கொடுக்கிறார்.
இந்து ராஷ்டிரத்தில் ஏழ்மை ஒழிக்கப்படாது. ஏழைகள்தான் படிப்படியாக ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சியம் !
***

கருத்துப்படம் : வேலன்