Saturday, April 19, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜக-வில், நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாசுகி சேர்ந்திருப்பது பொருத்தம்தான்.

-

ள்ளக்குறிச்சி அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரியில் சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் மூன்று மாணவிகள் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியம், கடந்த நவம்பர் 30-ம் தேதி பொன்னார் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலையில் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளான மோனிஷா, பிரியங்கா மற்றும் சரண்யா ஆகிய மூன்று மாணவிகள் கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

படிக்க :
♦ சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
♦ SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை

கல்லூரியில் வாங்கப்படும் அதிகக் கட்டணத்திற்கு எதிராக அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். இம்மூன்று மாணவிகளும் இப்போராட்டங்களில் முன்னணியாக நின்றுள்ளனர். இம்மாணவிகள் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும், அம்மாணவிகளின் பெற்றோரும், அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியம்தான் இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து தலைமறைவான வாசுகி, சிறிது நாட்களுக்குப் பிறகு சரணடைந்தார். அவரைத் தொடந்து அவரது கணவர் சுப்பிரமணியன், மகன் சுவாக்கர் வர்மா, அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த வாசுகி, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தார்.

கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், முறையாக அனுமதி வாங்காமல் கல்லூரி நடத்தியது, உரிய ஆசிரியர்களை நியமிக்காமல் ஏமாற்றி வகுப்பு நடத்தியது, அந்தக் கல்லூரி நிலத்தையே அயோக்கியத் தனமாக ஏமாற்றி வாங்கியது என இந்தச் சீமாட்டியின் வண்டவாளங்கள் ஏராளம்.

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த வாசுகி லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு ஒரு ரத்தப் பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். அதன் பின்னர் அருகில் கிளினிக் நடத்திவந்த மருத்துவர் சுப்பிரமணியனை திருமணம் செய்த பின்னர், இந்த மருத்துவக் கல்லூரி இருக்கும் நிலத்தை வாங்கி பல்வேறு முறைகேடுகள் செய்து எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார்.

கல்லூரிக்கு அனுமதி வாங்கியதே பல போர்ஜரி வேலைகள் செய்துதான். அது போதாது என கல்லூரிக்கு சுற்றியுள்ள 1.45 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து கல்லூரி கட்டியிருந்தார் வாசுகி.

படிக்க:
♦ விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !
♦ நீட்: ”அடிபணியாதே” – அனிதா சொல்லிச் சென்ற செய்தி !

கல்லூரிக்கு அருகில் ஓடிய ஓடையை தூர்த்துதான் கல்லூரியின் நுழைவு வாயிலைக் கட்டியுள்ளார். ஓடைக்கு விறகு பொருக்க வந்த அப்பகுதி பெண்ணை, “இனி இவ்வழியாக வந்தால், விச ஊசி போட்டுக் கொன்று விடுவேன்” என நேரடியாக மிரட்டியிருக்கிறார்.

இத்தகைய தில்லாலங்கடிதான் இந்த வாசுகி. தற்போதுதான் தனக்குப் பொருத்தமான ஒரு கட்சியைப் பார்த்து சேர்ந்துள்ளார்.

நீட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோத கல்விக் கொள்கைகளின் மூலம் பல மாணவ மாணவியரின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் பாஜகவும், தனது கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல், மூன்று மாணவிகளின் மரணத்திற்குக் காரணமாயிருக்கும் வாசுகியும் ஒன்று சேர்ந்திருப்பது நல்ல பொருத்தம்தான் !


நந்தன்

செய்தி ஆதாரம் :
கலைஞர் செய்திகள்