Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாCAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

இப்பேரணியில் பெருவாரியான விவசாயிகளும், சீக்கியப் பெண்களும், இசுலாமியப் பெண்களும் கலந்து கொண்டனர். “மீண்டும் ஒரு 1947 சூழலை உருவாக்காதே” என்பதே அவர்களது முழக்கம்

-

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தின் மலெர்கொட்லா நகர வீதிகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணி சென்றுள்ளனர்.

நமது தமிழகத்தின் அடிமை அரசைப் போல் அல்லாமல், பஞ்சாப் மாநிலத்தில் மாநில அரசாங்கமே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே !

இதன் தொடர்ச்சியாகவே வரவிருக்கும் பிப்ரவரி 16-ம் தேதி மலெர்கொட்லா நகரில் ஒரு பெரும் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர், பஞ்சாப் விவசாயிகள். அந்த பெரும் பேரணிக்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைப்பு விடுக்கும் வண்ணம் ஒரு வரவேற்புப் பேரணியாகவே கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஒரு பேரணியை நடத்தியுள்ளனர்.

நடைபெறவிருக்கும் பெரும் பேரணியும், அதற்கான வரவேற்புப் பேரணியும் பாரதிய கிசான் சங்கம் (ஏக்தா) உக்ரகன் குழுவின் பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முசுலீம் அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் மற்றும் சர்கா சாஃப்ரி ஆகியவை போன்ற சில அமைப்புகளும் கலந்து கொண்டன.

இந்தப் பேரணியில் பெருவாரியான விவசாயிகளும், சீக்கியப் பெண்களும், இசுலாமியப் பெண்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தங்களது ஒருமித்த தன்மையை பறைசாற்றும்வண்ணம் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். “இந்து முசுலீம், சீக்கியர், கிறித்தவர் அனைவரும் சகோதரர்களே ! சகோதரர்களுக்கு இடையில் சண்டை வருவதை அனுமதிக்க மாட்டோம், மீண்டுமொரு 1947-ஆக இதை அனுமதிக்கமுடியாது” என பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

இந்தப் பேரணி நகரின் பல்வேறு பகுதிகளில் செல்கையில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் தலைவர்கள், அதில் உரையாற்றினர். அவர்களது உரையில் அனைவரும் மதத்திற்கு மேலாக ஒன்று திரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளனர்.  நாடு முழுவதும் அமைதியாகப் போராடும் மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையையும் தாக்குதலையும் தொடுக்கும் மோடி அரசுக்குத் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான மோடி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரி மாணவர்களுக்குத் தங்களது ஆதரவையும் பதிவு செய்தனர்.

படிக்க:
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !
♦ LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

வரவேற்புப் பேரணியிலேயே சுமார் 20,000 பேர் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதிலிருந்து பிப்ரவரி 17-ல் நடக்கப் போகும் பேரணியின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். எது எப்படியோ ! தனது இந்துராஷ்டிரக் கனவுக்கு எதிராக இத்தனை பேரை ஒரே இடத்தில் குவித்த பெருமை மோடி – அமித்ஷா கும்பலை மட்டுமே சேரும் !

நந்தன்
நன்றி :  தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க