மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், பெற்றோர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 12/08/2020 அன்று சென்னை கிளையின் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் தலைமையில் சென்னை பாடநூல் கழகம் ( DPI ) பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தேசிய கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல். இந்த கல்விக் கொள்கையால் படிப்பறிவு இல்லாத குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உருவாகக்கூடும். மீண்டும் குலக்கல்வியை கொண்டுவரவும், தொழில் கல்வியை ஊக்குவித்து முதலாளிகளின் லாபத்தை நேக்கத்திற்கு தேவையாக அடிமைகளை உருவாக்கவே இக்கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிராக உள்ளது. எனவே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
படிக்க:
♦ மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
♦ NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !
தமிழக அரசு இரு மொழி கொள்கையை அமுல்படுதுவோம் என்று உறுதியாக உள்ளது என்றும், இதற்கென ஒரு ஆய்வு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாகவும், இந்த மனுவை பரிசீலித்து முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.