கொரோனா ஊரடங்கில் நாட்டுமக்கள் வறுமையில் வாடும் சூழலில் நாடு வளரச்சி அடைகிறது என்கிறார் மோடி. மக்கள் நலன், இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை கொரோனா ஊரடங்கு சூழலை பயன்படுத்தி விரைந்து அமுல்படுத்துகிறது மத்திய பா.ஜ.க அரசு. ஏழை தாழ்த்தப்பட்ட மக்களை தற்குறிகளாக மாற்றும் நவீன குலக்கல்வித் திட்டமான புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பையும் மீறி அமுல்படுத்துகிறது.
சுயசார்பு என பேசிக்கொண்டு அதற்கு மாறாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா மூலம் ஒட்டுமொத்த இயற்கையையும் கார்ப்பரேட் இலாப வெறிக்குப் பலியாக்கி சுற்றுச் சூழலை பாழ்படுத்தவும் தயாராகிவிட்டது.
மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி… என்ற பாடல் தருமபுரி மக்கள் அதிகாரம், கலைக்குழு தோழர்களால் காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள் பகிருங்கள் !
