கடலூர் மாவட்டம் கோ.பூவனூர் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பகுதி இளைஞர்கள் சார்பாக மாணவி அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீட் தேர்வில் மத்திய அரசு முதல் மாநில அரசு வரை, உச்ச நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை இதுவரை இழைத்துவரும் அநீதிகளையும், RSS – BJP யின் வன்மத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் தோழர்கள் தமிழகத்திற்கு நீட் தேர்வால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி நினைவேந்தல் உரையில் விளக்கி பேசினர். இதற்கு தோழர் கார்த்திக் தலைமை வகித்தார். தோழர் கணேஷ்மற்றும் தோழர் பால்ராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக தோழர் அர்ஜுன் நன்றி உரையாற்றினார்.
இதில் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.
படிக்க:
♦ பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்
***
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம் !!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பாலக்கரையில் 02.09.2020 அன்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
- கொரோனா – பல்கலைக்கழகங்கள் திறக்கவிலை கட்டணம் எதற்கு?
அண்ணா பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையை நிறுத்து! - கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்!
- புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் !
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர். மணியரசன் தலைமை தாங்கினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதில் தோழர் மணிவாசகம், தோழர் பால்ராஜ் மற்றும் புமாஇமு உறுப்பினர்கள் பூங்குழலி, மணிகண்டன், கணேஷ், அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மாணவி அனிதாவைப் போல தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா பெரும் நோயினால் 5- மாதம் மூடி கிடந்த நிலையில் “மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும், அப்படி இல்லை எனில் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள்.” என பகிரங்க மிரட்டல் விடுகிறது. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.