சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது !!
பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் தோழர் மு.சரவணன் வரவேற்புரையாற்றினார்.
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றினார். தனது உரையில், “நாம் ஏன் நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி நாளை நினைவுகூர வேண்டும்?” என்பதை விளக்கிப்பேசினார்.
உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வந்த நாள், வரலாற்றில் முதல் முறையாக யாரும் பார்த்திராத வகையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசாங்கம் உருவானது. அதேபோல் நாமும் நமது நாட்டில் புரட்சி நடத்த அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். ஏழை, உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்துப் போராடுவோம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்“ என அறைகூவல் விடுத்தார்.
இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பாருங்கள் ! பகிருங்கள்!!