நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA

பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் விரிவாக விளக்கியிருக்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம்

வம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சி.எச். வெங்கடாச்சலம் அறைகூவல் விடுத்திருக்கிறார். அவர் தனது உரையில் :

இந்தியாவில் கடந்த 50 வருடங்களாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சுமார் 40 தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு. அதற்கேற்ற வகையில் தொழிற்சங்கச் சட்டங்களைத் திருத்திவருகிறது மோடி அரசு.

தொழிற்சங்க சட்டம், தொழில் தகராறு சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் மாற்றங்களைச் செய்துவருகிறது அரசு. தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, நிலையான ஊதியம் இல்லை, மகப்பேறு விடுப்புகள் கிடையாது, புதிய பென்சன் திட்டம் என்ற பெயரில் பழைய பென்சன் திட்டமே ஒழித்துக் கட்டப்படுகிறது. முதலாளிகளுக்கு ஏற்றவகையில் வேலை நேரம் அதிகரிக்கப்படுகிறது.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
♦ இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

விவசாயத்தை அழிப்பதற்கான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் வகையில் திறந்துவிட்டு, திவாலாக்கி அவற்றை தனியாரின் கைகளில் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு !

எதிர்வரும் நவம்பர் 26, 2020 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் பங்கேற்று இழந்த நமது உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் ! போராடுவோம் !

கார்ப்பரேட்டுகளுக்காக சூறையாடப்படும் பொதுத்துறை வங்கிகள் :

தொழிலாளர் உரிமைகளை மீட்க ஒன்றிணைவோம் :

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க