அனைத்து பெண்கள் கூட்டமைப்பு
பத்திரிகை செய்தி
டெல்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18-ம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று (18.01.2021) போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை 11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.
திட்டமிட்டபடி காலை 11.30 மணிக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த  சுமார் 100 பெண்கள் சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஒன்றுகூட முற்படும்போதே, ஆண் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை நெருங்கவிடாமல், விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி பெண்கள் முன்னேறினர்.
பெண்களை தடுத்து நிறுத்திய ஆண் காவலர்களுக்கு எதிராகவும் பெண்கள் முழக்கமிட்டவுடன், பெண் காவலர்கள் பாய்ந்து வந்து கயிறுகளை கொண்டு வளைத்துப் பிடித்து கைது செய்ய முற்பட்டனர். ஆனாலும் பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவலர்கள் பெண்களை கைது செய்து வேளச்சேரியில் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆங்காங்கே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்களை  போராட்டத்திற்குள் வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டது. தோழர்கள் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடும் விவசாயிகளுக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவிக்கும் !
தகவல்
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க