தேர்தல் ஜனநாயகத்தில் …
அடுத்த ரவுண்டு அடி வாங்கும் முன்னர் …
மகிழ்ந்து கொண்டாடும் இந்திய வாக்காளர்கள் !
கருத்துப்படம் : மு.துரை
குறிப்பு:
கார்ட்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட் : சிரியாவின் அதிபர் பஷர் அசாத்தின் ஒடுக்குமுறைகளை தமது தூரிகையால் அம்பலப்படுத்தியதன் காரணமாக பஷர் அசாத்தி குண்டர் படையின் தாக்குதலுக்கு ஆளானவர். இந்த விரல்கள்தானே வரைந்தன’ எனக் கேட்டு அவரது விரல்களை நொறுக்கினர்; கைகளை உடைத்தனர். குற்றுயிராய் வீதியில் வீசப்பட்டார் கார்டூனிஸ்ட் அலி ஃபெர்சாட்.
எனினும் தளர்வடையவோ, பயந்து ஒதுங்கவோ இல்லை. பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இன்னும் உக்கிரமாக ஜனநாயகத்துக்காக போர்க்கொடி தூக்கினார். அவர் மீண்டதும் வரைந்த கார்ட்டூன்தான் இது.
