கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய அவலங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய மோடி அரசோ மக்களை கொரானாவில் இருந்து காப்பாற்றும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வளவு ஏன்? அவர்கள் ஆளும் மாநிலத்திலேயே தினம் தினம் அவலமான செய்திகள்தான் வந்தவண்ணம் இருக்கிறது.

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்ற சாரம்சத்தின் அடிப்படையில் கொரோனா அவலங்களை பற்றி தருமபுரி மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடிய பாடல் காணொளி வடியில் வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

பாடல்இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

கொரோனா கொல்லுதம்மா
கொலைகார அரசாலே
மரண ஓலம் ஓயவில்லையம்மா – இந்த தேசமே
மயானமா மாறிப்போனதம்மா

லாக்டவுன் தொடருதம்மா
வாழ்க்கையே இருளுதம்மா
சுடுகாட்டில் எடமில்லாம – பொனம்
ரோடெல்லாம் ஏரியுதம்மா
வைரசா அரசான்னு
ஒன்னுமே புரியலம்மா
ஆக்சிஜனே இல்லாம – உயிர்வாழ
நம்ம ஆத்தா உசுரு போனதம்மா
(கொரோனா)

ஆகாச ஒசரத்துல
வல்லபாய் பட்டேலு
ஏழைகளுக்கிங் கில்ல
குளுக்கோசு பாட்டிலு
குழந்தைகள் மருந்தில்லாம
கொத்து கொத்தா சாவுது
குஜராத்து மாடலுன்னு அய்யோ
கொலையறுத்தான் மோடி நின்னு
(கொரோனா)

இந்தியாவின் இதயமே
மூச்சுவிட ஏங்குதம்மா
இரண்டாம் அலையம்மா
வடக்கே அழியுதம்மா
மருந்திலும் கொள்ளையம்மா
மரணத்திலும் கொள்ளையம்மா
யோகி ஆட்சியிலே – சங்கி
அந்த உ.பி அழியுதம்மா
(கொரோனா)

கொரோனா வைரஸ்சு
மக்கள மிரட்டுதம்மா
காவி பாசிசமோ
மக்கள பிரிக்குதம்மா
கார்ப்பரேட்டு பாசிசமோ
கழுத்த நெறுக்குதம்மா
இத்தன கிருமிகள… அய்யோ
இத்தன கிருமிகள….
ஒழிக்க ஒரு மருந்திருக்கு – அது
புரட்சி எனும் அருமருந்து
(கொரோனா)

வீடியோ ஆக்கம்
வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க