PP Letter head

13.05.2021

கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் !
மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத் திட்டங்களை முறியடிப்போம் !

உழைக்கும் மக்களே !

கொரோனா போன்ற பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் !

நாட்டை மீண்டும் காலனியாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் சதித் திட்டத்தை  முறியடிப்போம் !

மத்திய மாநில அரசுளே !

தடுப்பூசி நிறுவங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உற்பத்தியை அதிகப்படுத்து !

பொதுத் துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய் !

படிக்க :
♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்
♦ கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்

தனியார் ஆலைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இலவசமாக ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிபடுத்து !

எல்லா சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் மற்றும் ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பெருந்தொற்று மேலாண்மைப் பணியில் ஈடுபடும் எல்லா பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் கிடைக்கவும் அவர்களுக்குப் பொருத்தமானக் காப்பீடு திட்டத்தின்கீழ் அவர்களைக் கொண்டு வருவதை உத்திரவாதப்படுத்து !

ஒவ்வொரு பகுதியிலும் பரிசோதனை மையங்களை அமைத்திடு ! காய்ச்சல் முகாம்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைத்திடு !

ஆயிரம் பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தை உத்தரவாதம் செய் ! தேவையான செவிலியர் விகிதத்தை உத்தரவாதம் செய் !

கொரோனா பாதிப்பு உள்ளானவர்களை முழுமையாக 14 நாட்கள் அரசின் முகாம்களில் கண்காணிப்பில் வை ! சத்தான உணவுக்கு உத்தரவாதம் செய் !

தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மண்டபங்களைத் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்று !

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானக் குடும்பத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் – காய்கறிகளை இலவசமாக வழங்கிடு !

கொரோனாக் காலத்திற்கு மின்கட்டணத்தை ரத்துசெய் ! இலவசமாக சமையல் எரிவாயுவை சிலிண்டர் வழங்கு !

மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் உரிமை அமைப்புகள், ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடு ! ஊபா கருப்புச் சட்டத்தை ரத்து செய் ! இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய் !

000

கொரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையாக மருத்துவம் கிடைப்பதற்கு உத்திரவாம் செய் !

வருமான வரி வரம்புக்குக் குறைவான வருவாயுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.7,500 வீதம் கொரோனோ நோய்த்தொற்று முடியும் வரை நிவாரண வழங்கு !

குடும்பத்துக்கு 3 கிலோ பருப்பு, ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்கு !

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய் ! மீதமுள்ள கடனுக்கு வட்டியை ரத்து செய் !

ஜி.எஸ்.டி இழப்பீடுகளை உடனே வழங்கு ! ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய் !

சிறு – குறு – நடுத்தர தொழிலதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான தொழிலாளர் சம்பளம், மின் கட்டணத்தை வழங்கு !

பெட்ரோல், டீசல் மீதான மத்திய மாநில அரசுகளின் வரியைப் பாதியாகக் குறைத்து நிர்ணயம் செய் !

ஆட்டோ – லாரி, வாடகை கார் ஓட்டுனர், முடி திருத்துவோர், முறைசாராத் தொழிலாளர்களுக்கு கொரோனா இழப்பீடு தொகையான ஆறு மாதங்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்கு ! ஆட்டோ , கார் தவணைகளை ரத்து செய் !

தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் மக்கள் விரோத விவசாய சட்டங்களையும், மின்சார சட்டங்களையும் கைவிடு !

ஆண்டுக்கு ரூபாய் 10 கோடிக்கு கூடுதலாக வருவாய் உள்ளவர்களுக்கு 33 சதவீத பரம்பரை சொத்துவரி, 2 சதவீத கூடுதல் சொத்துவரி போடு ! உள்ளூர் கம்பெனிகளைப் போல பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் ஒற்றை வரியைப் போட்டு நிதியைப் பெருக்கு !


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு  – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க