மக்கள் அதிகாரம் நடத்தும் இணையவழி கூட்டம்

கொரோனா இரண்டாம் அலையில் இந்திய மக்கள் படுமோசமாக பாதிப்படைந்துள்ளனர். மோடி அரசு மக்களை கொரோனா பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் துரிதமாக எடுக்கவில்லை.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் மீதான கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மோடி அரசு தடுப்பூசிகளை இரண்டு தனியார் நிறுனவங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்தது மட்டுமல்லாமல், பேரழிவு காலச் சூழலிலும் அந்நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. மக்களுக்கு சுகாதார வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்க பணம் செலவழிக்காத சூழலிலும், கார்ப்பரேட்டுகளின் கல்லாவில் பணம் குறைந்துவிடக் கூடாது என்பதில் பெரும் அக்கறை செலுத்துகிறது மோடி அரசு.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி தோழர் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் இன்று (09-06-2021) மாலை 6.30 மணியளவில் இணையவழி உரையாற்றுகிறார். மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் அவரது உரையை தவறாமல் பார்க்கவும் !!

♦ தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை ! தொடரும் கார்ப்பரேட் கொள்ளை !

நாள் : 09.06.2021, புதன்கிழமை
நேரம் : மாலை 6.30 மணிக்கு

உரை :
தோழர் சுரேசு சக்தி முருகன்,
வழக்குரைஞர்

மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதீர்கள் !!

மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.


தகவல் :
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க