வெளிப்படைத் தன்மையான அரசு என்ற முழக்கத்துடன் உத்தம வேடம் போட்டு ஓட்டுக் கேட்டு ஆட்சியில் அமர்ந்த மோடி அரசாங்கம், ஆட்சியில் அமர்ந்த  பின்னர், இன்றுவரை எதற்கும் வெளிப்படைத்தன்மையாக பதிலளித்ததில்லை. அரசின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் உயர் அதிகாரிகளின்  மோடி அரசாங்கத்தின் கள்ளத்தனமான பதவி நீட்டிப்புகளை வழங்கி வருவதை, ஒன்றிய அரசின் முன்னாள் செயலர் E.A.S. சர்மா அம்பலப்படுத்தி பிரதமருக்கு ஒரு திறந்த மடலை கடந்த மே மாதம் எழுதினார். Countercurrents இணையதளத்தில் வெளியான அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு கீழே தருகிறோம் !

000

பெறுதல்
திரு நரேந்திர மோடி,
பிரதமர்

பொருள்:- நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை- அரசு ஆட்சிபணி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்தல் ஆகிய சமீபத்திய நிகழ்வுகள் நல்லாட்சி விதிகளுக்கு ஒத்ததாயில்லை.

மரியாதைக்குரிய மோடி அவர்களே,

நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் கீழ்கண்டவாறு சரியாக வலியுறுத்துகிறது.

”எந்த ஒரு மக்கள் அரசுக்கும் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்ச்சியும் ஒரு கட்டிடத்திற்கான இரு ஆதார அடிக்கற்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதியாக நம்புகிறார். வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்ச்சியும் அரசாங்கத்தோடு மக்களை நெருக்கமாக இணைப்பது மட்டுமல்ல, மேலும் அது முடிவுகள் எடுக்கும் செயல்முறையி்ல் அவர்களை சமமான, ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும் ஆக்குகிறது. நான்கு முறை முதலமைச்சராக இருந்த அவருடைய ஆட்சி காலத்தில் மோடி திறந்த மற்றும் வெளிப்படை தன்மையை வெளிப்படுத்தினார். விதிகளும் கொள்கைகளும் ஏசி அறையில் வகுக்கப்படுவதில்லை. மக்கள் மத்தியில் வகுக்கப்படுகிறது.   ….. அவருடைய வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாடு, இந்த கடமைகளை நடைமுறைப்படுத்த முன்வைக்கும் முறையினால் ஆதரவளிக்கப்படுகிறது. இது, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களை மையப்படுத்திய மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் சகாப்தத்தை குறிக்கிறது.’’

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் கார்ப்பரேட் நன்கொடையாக இருந்தாலும், அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார குறியீடுகளில் முக்கியமான தகவல்களை வெளியிடாத விவகாரமானாலும், பிரதமர் நிதியின் செயல்பாடு பற்றியவிவகாரமானாலும், தற்போதய மத்தியில் உள்ள அரசாங்கம் வெளிப்படைத்தன்மை கொள்கையிலிருந்து வெளியேறியிருக்கிற முறையானது மிக மிக கவலை கொள்ளத்தக்க விசயம் என்று நான் அச்சப்படுகிறேன்.

அரசாங்கத்திற்குள்ளேயே உள்ள முக்கிய அலுவலக நியமனங்களில் கூட உங்கள் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையோடு இருப்பதற்கு பதிலாக இருளில் காரியங்கள் முடிப்பதாக உள்ளது. உதாரணமாக, உங்கள் அரசாங்கமானது மூத்த ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கான மிகவும் வெளிப்படையாக நிர்ணயிக்கபட்ட இரு ஆண்டுகள் பதவிக் காலம் என்ற விதியிலிருந்து விலகி, சிறந்த நிர்வாக அடிப்படை விதிகளை அழிக்கும் விதமான நியமனங்களைச் செய்து அப்பதவியை விருப்பம்போல் நீட்டிக்கின்ற ஒரு மிகவும் தெளிவற்ற அமைப்பாக மாறி வெளிப்படை தன்மையிலிருந்து விலகியுள்ளது.

எங்களில் சிலர் முந்தைய யூபிஏ அரசாங்கத்திடம் செயற்கையான முறையில் அந்த விதிகளில் வரம்பு மீறி போவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால், துரதிஸ்டவசமாக உங்கள் தலைமையிலான என்டிஏ அரசாங்கம் அதைத்தான் செய்கிறது. மேலம் அது கொடுத்த – எதிர்பார்த்திருந்த வாக்குறுதிகளை செய்யவில்லை.

படிக்க :
♦ தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?
♦ நீதிபதிகள் நியமனம் – தேவை ஒரு வெளிப்படைத்தன்மை !

இரண்டாவது யூபிஏ அரசாங்க காலத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் என்ற மூன்று உயர் பதவிகளுக்கு நிலையான இரு ஆண்டுகள் பதவிகாலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக வாஜ்பாய் பிரதமராக இருந்த ஆட்சி காலத்தின் போது மத்திய அமைச்சரவை செயலாளர் பதவிக்கு இரு ஆண்டுகள் பதவி காலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இரு ஆண்டுகள் நிலையான பதவி என்ற நிர்ணயிக்கப்பட்ட திட்டம் என்பது தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் பொறுப்பு என்பதை முன்கூட்டியே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவாதப்படுத்துவது மற்றும் சொந்த விருப்பு வெறுப்புக்களின்றி, பெரிய பதவிகளில் சிறப்பாக செயல்பட வைக்கும் நோக்கம் கொண்டது.

மேற்குறிப்பிட்ட இரு ஆண்டுகள் பதவி காலத்திற்கு அப்பால் சிறப்பான ஒரு வேலைக்கு மீண்டும் பதவிகாலத்தை நீட்டித்து பதவி நீட்டிப்பது என்பது அதன்மூலம் ஆதாயம் அடையும் அந்த அதிகாரிகளின் நடுநிலை தன்மை மற்றும் பதவி நீட்டிப்பு கொடுக்கும் முடிவுகளுக்கு பின்னால் உள்ள உள்நோக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது. நம்மை போன்ற கூட்டுத்துவ அரசமைப்பின் ஒன்றிய அரசில் சிபிஐ, அமலாக்கத்துறை, சிபிடிடி, ஐபி போன்ற பெரிய பதவிகளில் பொறுப்பு வகிக்கும் சிவில் அதிகாரிகாரிகள் தொழில் ரீதியாக நடுநிலைத் தன்மையோடு இருப்பதும் சட்ட ஆட்சியை நிலை நாட்டுவதும் கட்டாயம். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த முயற்சியும் மத்திய அரசைப் பொறுத்தவரை அரசாட்சியின் நம்பகத்தன்மையை அழிக்கும்.

நமது கூட்டுத்துவ அரசமைப்பு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பரஸ்பர நம்பிக்கையில் குடி கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த மிக முக்கிய நிறுவனங்களை பலவீனப்படுத்துவது என்பது அந்த நம்பிக்கையை அழிக்கிறது.

உங்கள் அரசாங்கத்தால், அந்த இரு ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பதவிக் கால விதியில் வெளிப்படை தன்மையை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவரும் விதம் குறித்து நான் கீழே சில குறிப்பான உதாரணங்களை குறிப்பிடுகிறேன்.

பி.கே. சின்கா (முன்னாள் கேபினட் செயலாளர்) :

திரு. பி.கே. சின்கா 29-05-2015-ல் மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 2017-ல் இரு ஆண்டு பதவி கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. இரண்டாவது நீட்டிப்பு காலம் முடியும் தருவாயில் அவருக்கு மீண்டும் மூன்று மாதம் 2019, ஜூன் மாதத்திற்கு அப்பால் கொடுக்கப்பட்டது. சிவில் சேவைகளை கேபினட் செயலாளர் தலைமை தாங்குவதால் அந்த பதவி நீட்டிப்பு காலம் என்பது அரசாட்சியின் மீது நம்பகத்தன்மையை அழிப்பதோடு, சிவில் சர்விஸ் பணிகளில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

அந்த பதவிகளை நிரப்புவதற்கு அதிகமாக இல்லை என்றாலும் மற்ற தகுதியான, அவர்களுக்கு சமமான அதிகாரிகள் இல்லாமல் இல்லை. சிவில் சர்விஸ் தேர்வு என்பது மற்ற அதிகாரிகளை ஒப்பிடுகையில் சிலரால் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற ஒரு உணர்ச்சியை சில அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடாது.

சிபிஐ இயக்குனர் :

திரு. ஆர்.கே. சுக்லா, 03-02-2021 அன்று சிபிஐ இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார். அவர் சிபிஐ தலைமைக்கு தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட இரு ஆண்டுகள் நிலையான பதவிக் கால அவகாசம் கொடுக்கப்பட்டதால், அரசாங்கமானது முன்கூட்டியே தயாரிப்பாக, அவருக்கு பின்னர் பொறுப்பேற்கும் நபரை தேர்வு செய்திருந்தால் திரு சுக்லாவிற்கு பின்னர் பொருத்தமான உரிய நபரை பணியமர்த்திருக்க முடியும். இருப்பினும், மற்றொருவரை தேர்வு செய்யும் செயல்முறை போக்கு காலதாமதப்படுத்தப்பட்டது.

அஸ்தானா

அதற்கான காரணம் அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். அவருக்கு பதிலாக திரு எஸ்.கே. ஜைஸ்வால் 2021 மே மாதம்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார். திரு ஜைஸ்வால் சிபிஐ இயக்குனராக 26.05.2021-ல் தான் பதவி ஏற்றார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிபிஐயின் கூடுதல் இயக்குனர் பொறுப்பு இயக்குனராக செயல்பட்டார்.

சிபிஐயின் அடுத்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் குழுவில் இருந்தவர்களில் ஒருவரான திரு அஸ்தானா மீது கடந்த காலங்களில் சில குற்றச்சாட்டுகள் அப்போது இருந்தன என்பதை இங்கே குறிப்பிடுவது பொறுத்தமானது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அ்ப்போதும் விசாரிக்கப்பட்டு வந்தது. சுக்லா தனது பதவி காலம் முடியும் தருவாயில்( பிப்ரவரி 2021) அஸ்தானா மீதான வழக்குகள் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக, சுக்லாவின் கருத்து மீது இறுதி முடிவு எடுக்க அரசாங்கம் காலம் எடுத்து கொண்டது.

அரசாங்கம் சுக்லாவிற்கு அடுத்ததாக வர இருக்கும் இயக்குனர் தேர்வு நிகழ்ச்சிப்போக்கை அவரின் ஓய்வு பெறும் தேதிக்கு முன்னரே செய்திருந்தால் அஸ்தானாவை தேர்வு செய்ய வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தேவையற்ற காலதாமதத்தின் மீது கவலை தெரிவிப்பதற்கு அப்பால் மூன்று மாதத்திற்கு மேலாக முறையான இயக்குனர் இல்லாமல் சிபிஐயை செயல்பட அனுமதித்ததன் மீது மேலும் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 2014-லிருந்து ஒரு ஆக்டிங் இயக்குனருக்கு பொறுப்பு கவணிக்க ஒப்படைக்கப்பட்டுவந்தது என்பது இது நான்காவது முறை ஆகும். சிபிஐ சில எதிர் கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்கள் தொடர்பான உணர்ச்சிகரமான வழக்குகளை கையாண்டுவருவதை கணக்கில் கொண்டால் இது, சுயட்சையான புலனாய்வு அமைப்பான சிபிஐயின் நம்பகதன்மை மீது கவலை கொள்வதை அதிகரிக்கிறது. எந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் அதன் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை சார்ந்திருக்கிறது.

அமலாக்கத்துறையின் இயக்குனர்:

திரு எஸ்கே மிஸ்ரா அவர்கள் 19-11-2018 அன்று அமலாக்கத்துறையின் இயக்குனராக, நிலையான இரு ஆண்டு பதவிகாலம் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டார். நவம்பர் 2020-ல் அவருடைய அசல் நியமன ஆணை அவருக்கு மூன்று ஆண்டு பதவி காலத்திற்கு வழிவகை செய்யும் வகையில் திருத்தப்பட்டது. அவருடைய பணி நீட்டிப்பு அப்போதிலிருந்து உச்சநீதி மன்றத்தின் முன்னால் எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

சிபிஜ சம்மந்தமாக மேலே சொன்ன அதே காரணத்திற்காக, அமலாக்கத்துறை பல்வேறு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் தொடர்பான முக்கிய வழக்குகளை நடத்திவருவதை கணக்கில் கொண்டால் இரு ஆண்டு பதவி காலம் என்பதிலிருந்து ஏற்படும் எந்த திசை விலகலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

திரு பி.சி. மோடி, சி.பி.டி.டி. தலைவர் :

திரு பி.சி மோடி அவர்கள் சி.பி.டி.டி.-யின் தலைவராக பிப்ரவரி 2019-ல் நியமிக்கப்பட்டார். முறைப்படி அவர் ஆகஸ்ட் 2020 இறுதியில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் அவர் 6 மாத காலம் அதாவது பிப்ரவரி 2021 இறுதிவரை பணியாற்ற பதவி நீட்டிப்பு செய்யப்பட்டார். மீண்டும் அவர் 1-3-2021-லிருந்து 31-05-2021 வரை 3 மாதம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டார். இவ்வாறு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பணிக்காக பதவி நீட்டிப்பு என்பது சிபிடிடி-க்குள் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி பணியில் தொடர்ச்சி கொடுப்பதை உத்திரவாதப்படுத்தும் நோக்கத்தை தோல்வி அடையச்செய்கிறது.

படிக்க :
♦ ‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

இந்த அரசாங்கம் சிபிடிடி தலைவரின் செயல்பாடுளில் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதி  ல் கவனம் கொடுத்திருந்தால் அந்த அலுவலகத்தில் இருப்பவர்க்கு ஏற்கனவே அவரது நியமனத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த இரு ஆண்டு நிலையான பதவி காலம் வழங்குவது அறிவுபூர்வமான அணுகுமுறையாக இருந்திருக்கும். பல முக்கிய வழக்குகளை கையாளும் சிபிடிடி யின் தலைவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக நீட்டிப்புகள் அதன் அடிப்படை நோக்கங்கள் குறித்து கவலையை எழுப்புகிறது.

ஐபி மற்றும் ரா அமைப்பின் இயக்குனர்கள் :

ஐபி மற்றும் ராவின் தலைவராக திரு அரவிந்த் குமார் மற்றும் திரு எஸ்கே வேனுகோபால் ஆகியோர் 26-06-2019 அன்று இரு ஆண்டு பதவி காலம் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். வழக்கமான முறையில் அவர்கள் ஜூன், 2021 ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். எனினும், இருவருக்கும் முறையே ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது என்பது புரிந்துகொள்ளக்கூடியது. மீண்டும் இது போன்ற நீட்டிப்புகள் இரண்டு நிறுவனங்களுக்குள் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையின் அனைத்து விதிமுறைகளையும் மீறுகின்றன.

சமீபத்திய தேர்தல்களின் போது சில அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை, சிபிடிடி போன்ற நிறுவனங்களை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டின. அந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இருக்க அவசியம் இல்லாமல் கூட இருக்கலாம் என்ற நிலையில் அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு பதவி காலம் தேவையற்ற நீட்டிப்புகள் வழங்கப்படுமானால் அந்த குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மையை பெறுகின்றன. ஒரு வகையில் அது, அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மறைமுகமாக அழித்துவிடும்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு நபர்களை நியமனம் செய்ய அதிகாரம் மற்றும் சுதந்திரம் இருப்பதாக வாதிடலாம். அந்த வாதத்தை ஒருவர் மறுக்க முடியாது. இருப்பினும், அரசாங்கத்தின் நம்பகத்தன்மை நிர்வாகத்தை வழங்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை முழுமையாக சார்ந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் சரியாக கூறப்பட்டுள்ளபடி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது பொறுப்புணர்வு ஆகியவை நல்லாட்சின் அடித்தளமாகும்.

உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் சீர்திருத்தங்களுக்காக கடன் வாங்கிக்கொண்டிருக்கும் போது எனது பார்வையில் எந்தவொரு சீர்திருத்த செயல்பாட்டின் முதல்படி நிர்வாகத்தை வழங்கும் நிறுவனங்களில் சீர்திருத்தத்தை கொண்டுவருவதாகும். இந்த கண்ணோட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை கையாளவதில் குறுகிய தற்காலிக நலன்களிலிருந்து விடுபட வலுவாக நான் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கள் உண்மையுள்ள
E.A.S. சர்மா,
இந்திய அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர்
விசாகப்பட்டினம்.

000


தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க