ரு வாரத்திற்கும் மேலாக கடுமையாகப் பெய்யும் மழை நின்றபாடில்லை. 20 ஆண்டுகளில் பெய்திராத பேய் மழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு ரோஹிங்கிய முஸ்லீம்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. வங்கதேசத்திலுள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பசாரில் 9 இலட்சம் ரோகிங்கிய முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூங்கிலாலும் நெகிழிப்பாய்களாலும் வேயப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை வெள்ளப்பெருக்கு கபளிகரம் செய்துள்ளது. 3 குழந்தைகள் உட்பட 6 ரோஹிங்கிய மக்கள் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடமில்லாமல் தவிக்கின்றனர்.

மியான்மரின் புத்த பெரும்பான்மை மதவெறியினாலும், இராணுவத்தின் கொடூர தாக்குதலாலும் நாடிழந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் வஙதேசத்திற்கு அகதிகளாக தப்பி வந்தனர். இது ஒரு இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள் அவை பிரகடனம் செய்துள்ளதைத் தவிர, இதுவரை அவர்களுக்குச் சாதகமாக வெறொன்றும் நடக்கவில்லை.

படிக்க:
♦ LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
♦ ’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !

“வெள்ளம் வடிந்த நிலம் எங்கும் இல்லை. ஒரு சமயத்தில் மழை நின்று வெள்ளநீர் வடியத் தொடங்கியது. ஆனால் மீண்டும் மழை பெய்து தண்ணீர் உயர்ந்து வருகிறது. நீங்கள் பார்ப்பதை விட இது மிகவும் மோசமானது. ”

சமையல் எரிவாயு உருளைகளைச் சுமந்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் வெள்ளநீர் வழியாக சிரமத்துடன் நடக்கிறார்கள். தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியதும், அகதிகள் தப்பிக்க எத்தனித்தனர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரையும் வெள்ளமானது கடுமையாக பாதித்துள்ளது.

தீவிபத்து அல்லது நிலச்சரிவு உட்பட முகாம்களில் ஏற்படும் ஒவ்வொரு பேரழிவிற்குப் பிறகும் அகதிகள் தான் முதலில் தற்காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

3,800 தற்காலிக தங்குமிடங்கள் வெள்ளத்தினால் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்துள்ளன. அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப டெக்னாஃப் மற்றும் உக்கியாவில் உள்ள வீடுகள் தற்காலிகமாக அடித்தளம் இல்லாமல் மூங்கில் மற்றும் தார்பாயினால் மட்டுமே கட்டப்பட்டன.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் கிட்டத்தட்ட 450,000 ரோஹிங்கியா குழந்தைகள் வாழ்கின்றனர். அவர்களுக்கு முறையாக பள்ளி செல்ல வசதி இல்லை மேலும் பெரிதாக உதவியும் கிடையாது.

இந்த ஆண்டு மட்டும், பல்வேறு தீ விபத்துகளாலும், கோவிட் -19 தொற்றுநோயினாலும் குழந்தைகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மழையின் விளைவாக, டெக்னாஃப் மற்றும் உக்கியா முகாம்களில் குறைந்தது 300 சிறிய மற்றும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. நிலச்சரிவுகளால் தங்குமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அகதிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் முகாம்களுக்கு செல்வதற்கான வழிகளும், உரிய உதவி கிடைப்பதும் தடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமையில், முகாம்கள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன மேலும் ரோஹிங்கிய அகதிகளுக்கு பாதுகாப்பாக தங்குவதற்கு சொந்தமாக வீடு என்று எதுவும் கிடையாது.


தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க