தந்தை பெரியாரின் 143-ம் ஆண்டு பிறந்த நாளில் RSS-BJP-யின் இந்து ராஷ்ட்டிர கனவை தகர்க்க உறுதியேற்போம் !
மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூல் பெருவாரியான மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
சென்னை :
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்து மதவெறி பாசிசத்தை வேரறுப்போம் என்று தோழர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். பெண் ஏன் அடிமையானாள் என்கிற நூல் பரவலாக பகுதி மக்களிடையே விநியோகிக்கபட்டது.
This slideshow requires JavaScript.
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் நிகழ்ச்சியை ஒட்டி, மக்கள் அதிகாரம் நெமிலி பகுதி தோழர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” என்கிற நூல் பரவலாக விநியோகிக்கபட்டது.
This slideshow requires JavaScript.
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
0o0
மதுரை :
தந்தை பெரியாரின்143-ம் ஆண்டு பிறந்தநாளில் RSS, BJP-யின் இந்து ராஷ்ட்டிர கனவையும் உழைக்கும் மக்களை சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்துவதையும், நீட் மற்றும் இந்தி சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றின் மூலம் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிப்பதையும், நாட்டின் கனிம வளங்களையும் , பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதை கண்டித்து முழக்கமிட்டு, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திராவிடர் விடுதலை இயக்கம், பெரியார் விடுதலை இயக்கம், மேலும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மதுரை அவுட் போஸ்ட் அருகில் உள்ள அம்பேத்கர் சிலையருகே பேரணியாக தொடங்கி பெரியார் சிலை வரைக்கும் அணிவகுத்தனர்.
இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தோழர் ராமலிங்கமும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக தோழர் ரவியும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அனைத்து முற்போக்கு இயக்கங்களும் சாரை சாரையாக முழக்கமிட்டவாறு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.அப்போது வி.சி.க கட்சியினரும் கலந்துக் கொண்டனர்.
This slideshow requires JavaScript.
மேலும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக பெரியாரால் நடத்தப்பட்ட பல போராட்டங்கள் மற்றும் அவரது படைப்புகள், இன்றைய காலகட்டத்திற்கு தேவை என்பதை வலியுறுத்தி, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் மேலும் பல வடிவங்களில் அடிமைப்படுத்தி இருப்பதை விவரித்து அப்பகுதியில் நன்செய் வெளியீடான “பெண் ஏன் அடிமையானாள்” என்னும் சிறு வெளியீட்டை பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. இவை மக்களிடம் வரவேற்பை பெற்றன.
தகவல் :
ம.க.இ.க,
தமிழ்நாடு
97916 53200.
0o0
தருமபுரி :
தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கொடியேற்று நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
This slideshow requires JavaScript.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, நன்செய் பதிப்பகம் வெளியிட்ட, தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூல் மக்கள் அதிகாரம் சார்பாக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனநாயக சக்திகளுக்கும் பெரியார் ஆர்வலர்களுக்கும் இலவசமாக நூறு எண்ணம் விநியோகம் செய்யப்பட்டது. பலரும் இந்நூலை ஆர்வமாக கேட்டுப் பெற்றுச் சென்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தர்மபுரி மண்டலம்
0o0
உளுந்தூர்பேட்டை :
பாலியில் பெரியார் பிறந்த நாள் முன்னிட்டு ரைடர் பாய்ஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பெண் ஏன் அடிமையானாள் என்ற நூல், பேனா, இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சந்தோஷ், சுபாஷ், ராகுல் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
ரைடர் பாய்ஸ் மற்றும் பெரியார் பேரன்கள்
பாலி, உளுந்தூர்பேட்டை.
0o0
விருதாச்சலம் :
தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்த நாளான 17/9/2021 அன்று கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம், விருத்தாசலம் சார்பாக “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் நூல் மக்களிடையே இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. இந்த நூல் விருத்தாசலம் கல்லூரி, நீதி மன்றம், ஆட்டோ ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.
This slideshow requires JavaScript.
இதில் மக்கள் அதிகாரம் தோழர் முருகானந்தம், CPI ML மக்கள் விடுதலை தோழர் ராமர், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தோழர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வினியோகிக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
0o0
கோவை :
தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட தோழர் ராஜன் மற்றும் பிற தோழர்கள், தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை.
94889 02202
0o0
புதுச்சேரி :
புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்ப்பாக “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகம் பெரியார் பிறந்தநாளன்று பெண்களிடம் வினியோகிக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
0o0
திருவாரூர் :
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் பெரியார் அம்பேத்கார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தந்தைப் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க வாகன பேரணி நடத்தப்பட்டது. அதில் மக்கள் அதிகார தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.

Related