இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

உலகத்தின் ரவுடியாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கவும், ஆசியாவின் பேட்டை ரவுடியாக இந்தியா மாறவும் வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

0
டந்த 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். முன்னெப்போதும் விட இந்த பயணம் மிக முக்கியமானது என்று ஊடகங்களும், சங்கிகளும், வலது சாரி பொருளாதார வல்லுனர்களும் கூப்பாடுபோட்டு வருகின்றனர். ஆம்… இந்த பயணம் மிகவும் முக்கியமானதுதான் யாருக்கு? காவிகளுக்கும், அவர்களின் எஜமான் கார்ப்பரேடுகளுக்கும்.
அமெரிக்கா தலைமையில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இணைந்து “குவாட்” என்ற அமைப்பை கடந்த 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேல்நிலை வல்லாராசாகவும் உலகத்தில் பெரிய ஏகாதிபத்திய நாடாகவும் வளர்ந்துவரும் சீனாவின் வளர்ச்சியை தடுப்பதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இக்கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்பின் 3-வது கூட்டம் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன், நமது வளர்ச்சி நாயகன் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோர் ஜப்பான் சென்றனர். அவர்களுடன் அந்நாட்டு பிரதமர் பியூமியோ கிஷிடாவும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டும் நவ தாரளமயத்தினை இன்னும் வீச்சாக கொண்டு செல்வது, இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை கார்ப்பரேடுகளின் வேட்டைக்கு சுதந்திரமாக திறந்து விடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
படிக்க :
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
♦ தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !
மேலும், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து விதமான சலுகைகளும் உதவிகளும் செய்வதாக கூறி, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். ஏற்கனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்தியவில் தொழில் தொடங்கி, இந்திய உழைப்பாளர்களின் உழைப்பினை சுரண்டி இயற்கை வளங்களையும், மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளைடித்துச் சென்றுள்ளன. அப்பேர்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது என்பது இழிநிலையிலும் கீழ்நிலை செயல்.
குவாட் கூட்டமைப்பின் முதல்நாள் கூட்டத்தில் சுரண்டல் மிகுந்த ஒரு கள்ளக்குழந்தையை 14 நாட்டுகள் சேர்ந்து பிரசவித்தன. அதுதான் இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, புருனே, தென்கொரியா, பிலிப்பையன்ஸ், மலேசியா ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் முக்கிய நோக்கம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியாத்தில் சீனாவை செல்வாக்கு பரவுவதை தடுப்பதுதான்.
உலகத்தில் அண்ணணாக இருக்கும் அமெரிக்காவுக்கு சீனாவின் வளர்ச்சியாலும், பொருளாதார மந்த நிலையாலும் தற்போது சருக்கல் ஏற்பட்டுள்ளது. இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தவும், அதை மேலும் செலுமைப்பாடுத்தவும் இதுபோன்ற கூட்டமைப்புகள் தேவைபடுகிறது. இதற்கு முன்பு அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி வந்த ஐநா சபை, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுனங்களில் பலம் தற்போது குறைந்து வருதால், இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அதன் விளைவாகவே இந்த இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு.
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க சார்க் அமைப்பு, ஜி 20, காமன்வெல்த், தெற்காசிய கூட்டமைப்பு போன்ற பல கூட்டமைப்புகளில் இந்தியா பிரதிநியாக இருக்கிறது. இதனால் இந்திய முதலாளிகளுக்கும், பல்வேறு நாடுளை சார்ந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்தான் பல நன்மைகள் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு அல்ல. இதுபோன்ற புதிய புதிய ஒப்பந்தங்கள் இந்தியாவின் மறுகானியாக்கத்திற்கான பாதையை மட்டுமே வலுபெரும்.
இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஆசிய நாடுகள்தான். 10 ஆசிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருப்பதால் அமெரிக்க அதிகளவு செல்வாக்கும் செலுத்தும் பகுதியாக இந்திய பெருங்கடல் அமைந்துள்ளது. சீனாவின் ஆதிக்கம் ஆசியாவிலே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி இந்த கூட்டமைப்பின் மூலம் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.
இதற்கு எதிர்வினையாக சீனாவும், தனது அதிகார பலத்தை காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் இயற்கை வளவங்களை கார்ப்பரேட் முதாளிகள் கொள்ளையடிப்பதும், தொழிலார்களின் உழைப்பை சுரண்டுவதும் மேலும் தீவிரமடையும். உலகத்தின் ரவுடியாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கவும், ஆசியாவின் பேட்டை ரவுடியாக இந்தியா மாறவும் வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க