ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான சீமா பத்ராவை தனது 29 வயது வீட்டுப் பணிப் பெண் சுனிதாவை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜார்க்கண்ட் போலீசு ஆகஸ்ட் 31 அன்று கைது செய்துள்ளது.
சுனிதா ஒரு ஆதிவாசி பெண். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமா பத்ரா வீட்டில் பணியாற்றத் தொடங்கினார். பத்ராவின் மகள் வத்சலாவுடன் டெல்லிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்றாள். அங்கு சுமார் நான்கு ஆண்டுகள் வேலை செய்தபிறகு, வத்சலா மற்றும் சுனிதா இருவரும் ராஞ்சிக்குத் திரும்பினர். அடுத்த ஆறு ஆண்டுகளில், ராஞ்சியின் ஆடம்பரமான அசோக் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் அந்தப் பெண்ணை பத்ரா அடைத்து வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார்.
பத்ரா பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழுவில் உள்ளார். அவரது கணவர், மகேஷ்வர் பத்ரா, ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. பத்ரா பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
படிக்க : உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!
ஆன்லைனில் வெளிவந்த பல வீடியோக்களில், சுனிதா என்ற 29 வயதான பணிப்பெண், மருத்துவமனை படுக்கையில் இருந்து தன்னை சூடான தவா மற்றும் தடியால் தாக்கியதாகவும், தரையில் இருந்து சிறுநீரை நக்கச் செய்ததாகவும் அச்சத்துடன் கூறுகிறார்.
This is how BJP National Working Committee leader Seema Patra tortured a tribal girl for 8 years …#BJPseBeti_Ko_Bachaao@KTRTRS pic.twitter.com/oMBkxe9n4d
— krishanKTRS (@krishanKTRS) August 30, 2022
அதன்பிறகு பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அதில் சுனிதாவின் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானதை விவரிக்கிறார்கள். அவர் சித்திரவதை செய்யப்பட்டு, கம்பிகள் மற்றும் இரும்பு பாத்திரங்களால் அடித்து, தரையில் இருந்து சிறுநீரை நக்க வற்புறுத்தினார் மற்றும் இரும்பு கம்பியால் அவரது பற்கள் உடைக்கப்படுள்ளது. அவளுடைய பற்கள் பல காணவில்லை.
அரசு ஊழியர் ஒருவரின் தகவலின் பேரில், சுனிதா பத்ராவின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். ஆகஸ்ட் 30 அன்று அப்பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு ஊழியருக்கு பத்ராவின் மகன் தகவல் கொடுத்துள்ளார்.
சுனிதா தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, பத்ராவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பத்ரா பாஜகவால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
படிக்க : விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !
அதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் போலீசு ஆகஸ்ட் 31 அன்று பத்ராவை கைது செய்யது. பத்ரா மீது இந்திய தண்டனையின் பிரிவுகள் 323, 325, 346, 374 பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதிவாசி பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த சீமா பத்ரா பாரதிய ஜனதா கட்சியின் பிரமூகர். பாஜக ஓர் குற்றவாளிகளின் கூடாரம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பத்ரா பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பதரா என்பதுதான் வேடிக்கையானது.
கொலை, கொள்ளை, சாதிய வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற எண்ணெற்ற குற்றங்களை செய்யும் காவி பயங்கரவாதிகளின் புகழிடமான திகழ்வதுதான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக போன்ற சங் பரிவாரங்கள். இவர்களை நாட்டைவிட்டு ஒழித்தால் பாதி குற்றங்கள் ஒழியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சந்துரு