21.09.2022

நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்சன், மண்டல குழு உறுப்பினர் தோழர் முத்து, பெரம்பலூர் பகுதி தோழர் சோபன் ஆகியோர் மீதான போலீஸின் அடக்கு முறையையும் தாக்குதலையும் மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

கண்டன அறிக்கை!

டந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் தயாராகிக் கொண்டிருந்த நெல்லை மண்டல இணைச் செயலாளரும் சட்டக் கல்லூரி மாணவருமான தோழர் கின்சனை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் “மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்” என்றுகூறி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனை எதிர்த்து கேள்வி கேட்ட மற்ற தோழர் முத்து உள்ளிட்ட இளைஞர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் கேள்வி கேட்ட ஒரு இளைஞனை பார்த்து “அவர் ஒரு பெண்ணை கொலை செய்து நகையை திருடி விட்டார்கள்” என்று அங்கு சுற்றியிருந்த ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.

படிக்க : ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

தோழர் கின்சனைப் பற்றி அறிந்த அந்த ஊர் மக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசைக் குவித்து போலீசு உதவி ஆணையர் மிரட்டிய போதும் பின்வாங்காமல் நள்ளிரவு 2 மணி வரை போலீசிடம் நியாயம் கேட்டு மக்கள் போராடியிருக்கிறார்கள்.

ஒரு ஊருக்குள்ளே வந்து ஒரு அமைப்பின் தலைவரை, அந்த ஊர் இளைஞரை போலீஸார் கடுமையாக தாக்கியதற்கு எதிராக போராடிய மக்கள் அடுத்த நாள் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி அராஜக செயலில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் சோபன் அவர்களின் வீட்டுக்குச் சென்ற போலீசு அவரை மாநாட்டுக்கு செல்லவிடாமல் தடுத்து முன்னெச்சரிக்கை கைது செய்திருக்கிறது.

மேற்கண்ட இரண்டு செயல்களுமே போலீஸ் துறை ஆர்.எஸ்.எஸ்-ன் கைப்பாவையாக மாறிவிட்டதை எடுத்துக்காட்டுகிறது.

முறையாக போலீஸ் அனுமதி பெற்று நடந்த மாநாட்டிற்கு செல்லவிடாமல் மக்கள் அதிகாரம் தோழர்களை அடிப்பது, அச்சுறுத்துவது ஆகிய அராஜகச் செயல்களில் ஈடுபட்ட போலீஸார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க