28.09.2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை !

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி – அதானி  பாசிசம் முறியடிப்போம் !

கண்டன அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தியது.

இச்சோதனை தொடர்பாக நாடு முழுவதும் அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது மோடியை கொலை செய்ய முயற்சி செய்வது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மக்கள் மீது மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச பார்ப்பன கும்பல் வைத்திருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை, கைதுகள் நடைபெற்றதாக ஏற்கனவே மக்கள் அதிகாரம் தெரிவித்தது.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

இன்று(28.09.20022) காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தடை செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இதன்மூலம் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக செயல்படக்கூடிய எந்த ஒரு அமைப்பின் மீதோ அல்லது எந்த ஒரு கட்சியின் மீதோ எப்போதும் எந்த நேரத்திலும்  தடை விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

வழக்கமான மோடியின் பாசிச நடவடிக்கைகளில் இது ஒன்று என்று கருதாமல் இதற்கெதிராக, அனைத்து முற்போக்கு, ஜனநாயக புரட்சிகர அமைப்புகளும் மக்களும் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க