பாசிசத்தை வீழ்த்த அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும்! | கே.பாலகிருஷ்ணன் | வீடியோ

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

SKM-யின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையில், உங்கள் மாநாடு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது. எங்கிருந்து தொடங்குவது, நிலை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து துறைகளும் சீரழிந்துவிட்டது. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் தரைமட்டமாகிவிட்டது. இந்த பொருளாதார சீரழித்தது இந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட நம் பண்பாட்டை சிதைத்து, மனித குலத்திற்கு விரோதமான சனாதன பண்பாட்டை இன்று புகுத்திக் கொண்டிருக்கிறது இந்த காவி – கார்ப்பரேட் கும்பல்.

இந்தியாவின் நீதித்துறை, ரிசர்வ் வங்கி, போன்றவற்றையெல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்கள். இந்தியாவில் உள்ள எதிர்கட்சியை அழிப்பது, கார்ப்பரேட்களிடமும் இலஞ்சத்தை வைத்து எதிர்கட்சியை அழிப்பது. வருமானவரித்துறையை ஏவிடுவது. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியா பாரம்பரியமிக்க கோட்பாடு, அதை அழித்து மொழி, இனம், சாதி மோதல்களை ஏற்படுத்தி ரத்தக்காடாக இந்தியாவை மாற்றியுள்ளார்கள்.

இவற்றை அம்பலப்படுத்த வேண்டும். மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தனிநபர்கள் விரும்பினால், கௌரி லங்கேஷ் போன்றோர் கொலை செய்கிறார்கள். அமைப்பாக இருந்தால் கைது செய்து வெளியே வர முடியாமல் செய்கிறார்கள். பாசிச கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடியை எப்படி ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுக்கு சாலை, விமான நிலையம், வங்கிகள், எல்.ஐ.சி என எல்லாவற்றையும் விற்கிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் விளக்கி கூறினார். அனைவரையும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க