தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. ஒரு எஸ்.பி நேரடியாக சென்று சுட்டுக்கொல்கிறார். டி.எஸ்.பி சுட்டுக்கொல்கிறார். இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொள்கிறார். ஒரு ஏட்டு சுட்டுக்கொல்கிறார். அப்போது இந்த வன்மம் எதற்காக இருந்தது என்பது அந்த அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை.

போலீசு – அரசு – நிர்வாகம் மூன்று பேரும் ஒன்றிணைந்து, முன்கூட்டிய திட்டமிட்டு அரச பயங்கரவாத நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் மாற்றுக்கருத்து இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனையை கொடுக்கவேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல் குற்றவாளியாக சேர்க்காமல் ‘அவர் பொய் சொல்லிவிட்டார்’ என்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கிச்சூடு என்பது டி.ஜி.பி-கோ முதலமைச்சருக்கோ தெரியாமல் நடப்பதற்கு வாய்பே இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க