ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று அறித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.

0

ஷ்யாவை ‘பயங்கரவாதத்தின் ஆதரவாளர்’ என ஐரோப்பிய நாடாளுமன்றம் நவம்பர் 23 ஆம் தேதியன்று அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடங்கி நடத்தியது.  இதனை தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போரில் பல்வேறு சம்பவங்கள், தாக்குதல்கள் இருவேறு நாடுகளாலும் அரங்கேற்றப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் -நவம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற்ற அவையில்- ரஷ்யா பயங்கவாதத்தின் ஆதரவாளர் என்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தபப்ட்டது. அந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 494 உறுப்பினர்களும், எதிராக 58 உறுப்பினர்களும், வாக்களிக்காமல் 44 உறுப்பினர்களும் பங்கெடுத்தனர். பெரும்பான்மை என்ற அடிப்படையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை ஜரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

படிக்க : உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !

உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்கள், அட்டூழியங்கள், நகர்புற உள்கட்டமைப்பை அழித்தல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கடுமையாக மீறல் ஆகிய செயல்பாடுகள் பயங்கரவாத செயல்களுக்கு சமம்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த வாக்கெடுப்பை வரவேற்று, “ரஷ்யா அனைத்து மட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என்றார். மேலும், அமெரிக்காவையும் பிற நாடுகளையும் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..

***

ரஷ்யா ஓர் ஏகாதிபத்திய நாடு என்பதிலே யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாடுகளின் மீது மனிதாபிமானமற்ற போர்களை நடத்தியுள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக, ஈராக் என்ற விடுதலை பெற்ற நாடு, அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறி, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ துருப்புகளையும், நேட்டோ படைகளையும் அந்நாட்டிற்குள் அனுப்பியது ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க ஏகாதிகத்திய அரசு. ஈராக்கின் மீது பொருளாதாரத் தடையை விதித்து அந்த நாட்டை செயல்படவிடாமல் செய்தது. பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்தது. ஈராக்கில் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் அழித்தது. இறுதியாக, அந்நாட்டின் பிரதமராக இருந்த சதாம் உசைன்–ஐ கைதுசெய்து தூக்கில்போட்டு கொன்றது.

படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !

அதேபோல, முகமது கடாபியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, லிபியாவின் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. பல்வேறு குண்டுகளை வீசி அந்நாட்டையே நிலைகுலைய செய்த அமெரிக்கா. இறுதியாக கடாபியை பதுங்கு குழிக்கு செல்லும் சூழலை ஏற்படுத்தி கொன்றது.

அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. தற்போது ரஷ்யாவிற்கு அமெரிக்கா சொல்லும் எந்தவித மனிதாபிமான ஆலோசனைகளையும் அது பின்பற்றவில்லை. எனினும் இன்றைக்கு ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவித்திருக்கிறார்கள். இந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நாய் சண்டையில் நம்மையும் இழுத்துவிட்டு தீர்ப்பு சொல்ல சொல்கிறார்கள்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க