சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன, சில அடங்கிவிட்டன. தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!

சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மே 1, 2023, பேரணி – மாநாடு  | மதுரை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

அன்றும் இன்றும், போராட்டக் களம் தமிழ்நாடு.
களத்தின் பெயர் கூட போராட்டத்தின் ஆயுதம்.
ஆம், “தமிழ்நாடு வாழ்க!”.
இது, பொங்கலில் தமிழ்நாட்டு மக்களின் முழக்கம்.

தேர்தல் மட்டுமல்ல, இந்தியும் அதிகாரத்தின் குறியீடு.
இது அமித்ஷாவுக்கும் தெரிந்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கும் புரிந்திருக்கிறது.

காவி கும்பல், தமிழ்நாட்டில் நடந்தப்
போராட்டங்களைப் பார்த்து திகைத்துவிட்டது.
“இன்னும் மங்கவில்லையே, இந்தி எதிர்ப்புணர்வு”,
இது அவர்களை அதிர்ச்சியடையச் செய்த விசயம்.
ஆம், இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது
தமிழ்நாடு, இதுவே நமக்குப் பெருமைக்குரிய விசயம்.

இந்து-இந்தி-இந்தியா என்ற சித்தாந்தம்
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தமிழுக்கும் எதிரானது.
தொல்காப்பியமும் திருக்குறளும் சித்தமும்
சமரச சன்மார்க்கமும் தமிழ் மரபு,
ஆம், அது வேத-பார்ப்பனிய எதிர்ப்பு மரபு.

“கர்நாடகத்தைக் கைப்பற்றிவிட்டோம்,
அடுத்தது தமிழ்நாடு, கேரளா” என்று கொக்கரித்தது,
மோடி-அமித்ஷா கும்பல்.
ஆண்டுகள் பல ஓடிவிட்டன.
தமிழ்நாட்டின் பா.ஜ.க.வோ கட்சியைக் காப்பாற்றிக்
கொள்வதற்காகவே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் தொடங்கிய பயணம்,
கர்நாடகாவிலேயே தேங்கிவிட்டது.
ஏனென்றால், இது தமிழ்நாடு.

கலவரங்களைத் தூண்டுவதற்கு மாவட்டந்தோறும்
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள்;
வடமாநிலத் தொழிலாளர்கள், அருந்ததியினர் மீது
இனவெறி துவேஷங்கள்;
பெண்களை இழிவுப்படுத்துகிறது மனுதர்மம் –
முழங்கிய திருமா, ஆ.ராசாவைக் கைது
செய்யக்கோரும் வெற்றுக் கூச்சல்கள்;
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு – இசுலாமிய
பயங்கரவாத பீதிகள்;
மாணவிகள் இறந்தால் மதமாற்றம் என்ற
வதந்திகள்… எவையும் எடுபடவில்லை.
ஏனென்றால், இது தமிழ்நாடு.

அம்பேத்கரை காவிமயமாக்கி,
அம்பேத்கருக்கே மாலை அணிவிக்க வந்தது
அர்ஜுன் சம்பத் கும்பல்.
செருப்படி கொடுத்தது தமிழ்நாடு.
திகைத்து நின்றது காவி பாசிச கும்பல்.

தமிழையும் திருவள்ளுவரையும் மதம்மாற்ற
முயற்சிக்கிறது தமிழ்நாட்டில் பிறந்த காவி கும்பல்,
இது துரோகப் புத்தி.
தமிழுக்காக உயிரைக் கொடுப்பவர்கள் போல
நாடகமாடுகிறது வடநாட்டு காவி கும்பல்,
இது உறவாடிக் கெடுக்கும் பார்ப்பன யுக்தி.

சாம, தான, பேத, தண்டம் எனும்
நான்கு அம்புகளையும் நாலாயிரமாக்கி
தமிழ்நாட்டிற்கு எதிராக வீசுகிறது
ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
அவை அனைத்தும்,
இரும்புக் கோட்டையின் மீது மோதிய
குண்டூசிகளாய் விழுந்து கிடக்கின்றன,
ஏனென்றால், இது தமிழ்நாடு.

எனினும், நாட்டையே சூழ்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-
பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பல்
ஓய்ந்துவிடவில்லை.

பரந்தூர் விமான நிலையம், எட்டுவழிச்சாலை,
டெல்டாவை அகழ்ந்தெடுக்கும் ஹைட்ரோ கார்பன்…
தமிழ்நாட்டின் விவசாயத்தை அழிப்பதற்கான
திட்டங்கள்தான் எத்தனை எத்தனை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட், அது அகர்வாலுக்கு.
காட்டுப்பள்ளி துறைமுகம், அது அதானிக்கு.
கவுத்தி-வேடியப்பன் மலை, அது ஜிண்டாலுக்கு…
தாய்மண்ணை வெட்டி கூறு போடும்
மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா
கார்ப்பரேட்கள்தான் எத்தனை எத்தனை.

ஆர்.என்.ரவி என்றொரு உளவாளி,
அவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநராம்.
போலீசு, நீதிமன்றம், சிவில் நிர்வாகம் என
அதிகார வர்க்கம் முழுவதும் ஊடுருவி வருகிறது,
உளவாளிகள் கூட்டம்.
சாதிச் சங்கங்கள், ரௌடி கும்பல்கள், யூடியூப்
பிரபலங்கள், சினிமா பிரபலங்கள்…
தமிழ்நாட்டை ஊடறுக்க எதையும்
விட்டுவைக்கவில்லை இந்த சங்கிக் கூட்டம்.

ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களின் இரத்தத்தை
உறிஞ்சுகின்ற மோடி-நிம்மி கும்பல்,
அதனை அம்பானிக்கும் அதானிக்கும்
படையல் வைக்கிறது.
தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி,
விவசாயிகளை நடைப்பிணங்களாக்கி,
மீனவர்களையும் பழங்குடியினரையும் விசிறியடித்து,
நூற்றுக்கணக்கான சட்டங்களைத் திருத்துவதன்
மூலம் மாநிலங்களின் எலும்புகளை நொறுக்குகிறது.

நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற
புதிய சட்டங்களின் மூலம் மாநிலங்களின்
நரம்பு மண்டலங்களை அறுத்தெறிகிறது.
நாட்டின் பல் மொழி, இன, பண்பாட்டுச்
சிறப்புகளையெல்லாம் அழித்து, ஒற்றை மொழி,
ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம்…
காவி ஓர்மையைத் திணிக்கிறது.

2024, ஒரே நாடு ஒரே தேர்தலாம்;
இது, இந்துராஷ்டிர பாசிச முடியாட்சியின்
அரங்கேற்றமாம்,
போர் முழக்கமிடுகிறது பாசிச கும்பல்.
அதன் கடவுளர்களான அம்பானி, அகர்வால்,
அதானி கார்ப்பரேட் அவதாரங்கள்.
அதன் படைகளாக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.
வானரங்கள்.

நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன,
சில அடங்கிவிட்டன.
தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது?
தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண்.
பெரியார் தன்மான படை வளர்த்த மண்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு
உரைத்த மண்.
கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு.

பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், சின்னமலை,
சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன்,
வ.உ.சி., சிங்காரவேலர்…
உறுதிமிக்கது நமது விடுதலைப் போராட்ட உணர்வு.

தனித்தியங்கும் தமிழ்நாட்டின் இம்மரபுகள்தான்,
ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் கொடுங்கனவு.

தொழிலாளர் வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை
நிறைவேற்றிய போராட்ட தினமான
மே தினத்தில் உறுதியேற்போம்!

ஆர்.எஸ்.எஸ்.யின் கொடுங்கனவை
நனவாக்குவோம்!
வீழாது தமிழ்நாடு,
துவளாது போராடு என முழங்குவோம்!

***

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி
பாசிசம் முறியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக்
கட்டியமைப்போம்!

  • ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலைத்
    தடுக்கவில்லையெனில்,
    தாய்மொழியும் அழியும், தாய் மண்ணையும்
    இழப்போம்!
  • இந்தி ஆதிக்கத்தை வேரறுப்போம்!
    தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
  • பல்தேசிய இன-மொழி-பண்பாட்டுக்கு எதிரான
    இந்து-இந்தி-இந்துராஷ்டிரத்தை நிராகரிப்போம்!
  • இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும்
    இசுலாமியர்கள், கிருத்தவர்கள்,
    தலித்துகள் மீதான
    தாக்குதல்களை முறியடிப்போம்!
  • மார்வாடி, குஜராத்தி, பார்ப்பன, பனியா
    கார்ப்பரேட்டுகளின்
    அடியாள்படையான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.
    கும்பலை விரட்டியடிப்போம்!
  • வள்ளுவர், வள்ளலார், சித்தர்கள், பெரியார்,
    அம்பேத்கர்…
    ஆரிய-பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப்
    பிடிப்போம்!
  • பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
    வேலுநாச்சியார், மருது சகோதரர்கள்,
    தீரன் சின்னமலை, சுந்தரலிங்கம்,
    திப்புசுல்தான், வ.உ.சி., சிங்காரவேலர்…
    விடுதலைப் போராட்ட மரபை வரித்துக்
    கொள்வோம்!
    தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை
    முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான
    மாயையிலிருந்து விடுபடுவோம்!
    பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கப்
    போராடுவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுச்சேரி

9791653200; 9444836642,
7397404242, 996236631

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க