23.03.2023

பத்திரிகை செய்தி

பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது!

ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிச கும்பலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

டந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என தொடரப்பட்ட பொய் வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?” என்ற ஒரு உண்மையை பேசியதால் , ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பொதுவான பிரச்சாரங்களின் போது இஸ்லாமிய மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அவதூறாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிச கும்பல் , ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வது கேலிக்குரியதாகும்.

மோடிக்கு எதிராக பேசுபவர்களுக்கு இனி சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

ராகுல் காந்தி மட்டுமல்ல; அண்மையில், சேத்தன் குமார் என்ற கன்னட நடிகர் ” சாவர்க்கரின் பொய்களால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராமர் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்தி திரும்பியதும் இந்தியா பிறந்தது என கூறியது பொய். 1992: பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் என கூறுவதும் பொய்.திப்புவை கொன்றது ஊரி கெளடா – நஞ்சேகெளடா என்பதும் பொய். பொய்யான இந்துத்துவத்தை உண்மையால் வீழ்த்த முடியும். உண்மை அனைவருக்கும் பொதுவானது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

படிக்க: தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு

நீரவ் மோடி ,லலித் மோடி என பல்லாயிரம் கோடிகளை அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை. இந்த கார்ப்பரேட் கும்பலுக்கு மட்டுமல்ல; ஹிண்டன் பார்க் அறிக்கை மூலம் பாசிஸ்ட் அதானிக்கு ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பல் இந்த நாட்டையே தாரை வார்த்தது அம்பலமானது. இப்படிப்பட்ட சூழலில்தான்

ஆர். எஸ். எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் ராகுல் காந்தியை முடக்கவும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. சேத்தன் குமார் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

எத்தனை பொய் வழக்குகளைப் பதிவு செய்தாலும் சிறை, சித்திரவதைகள் விதிக்கப்பட்டாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்று முழங்குவோம்!
ஆர் எஸ் எஸ் – பாஜக பாசிச கும்பலின் பயங்கரவாதத்தை முறியடிக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்!

தோழமையுடன்,
தோழர் சி .வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க