24.03.2023

ஆருத்ரா பண மோசடி:
மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த
பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது!

அண்ணாமலையை கைது செய்!

பத்திரிகை செய்தி

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஏமாற்றி, ரூ.2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு. அந்நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகி மாலதி ஆகிய இரண்டு பேரையும் நேற்றைய தினம் (23.03.2023) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்ட ஹரிஸ், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். ஹரிஷ் இப்போது வரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான்.

படிக்க : ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. இது குறித்தும் தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய வேண்டும்.

இந்தப் பண மோசடி விவகாரத்தில் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் தொடர்பு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஹரீசுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உடனடியாக போலீஸ் விசாரணை செய்து அண்ணாமலை மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க