நெருக்கடியில் இருந்து இன்றும் மீளவில்லை ஆப்கான். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. இதனால், 2.83 கோடி மக்கள் அதாவது ஆப்கான் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட மக்களில் 60 இலட்சம் பேர் நெருக்கடியின் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான்.
மத்திய ஆப்கானில் உள்ள மலைப் பிரதேசமான பாமியானில் ஆய்வினை நடத்தியுள்ள ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம், அங்கு குளிர்காலம் பல ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையாக நிலவுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே வறுமையிலும் நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களை இக்குளிர் மேலும் வாட்டியுள்ளது. கடும் குளிரில் இருந்து தப்பிக்க இருப்பிடம் இல்லாத பல குடும்பங்கள் குகைகளில் தஞ்சமடையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து UNHCR வெளியிட்ட படங்கள்..
கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தினசரி உணவு ரொட்டியும் தேநீரும்தான்.வாடகை வீட்டிற்கு குடிபெயர முடியாததால், தனது மூன்று குழந்தைகளுடன் சிறு குகையில் தஞ்சம் அடைந்துள்ளார் ஃபாதீமா.ஆப்கானின் மிகவும் குளிர்ச்சியான பாம்யானில், வாடகை வீட்டிற்கு செல்ல வழியில்லாமல், மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் குகைகள்.66 வயதான ஷய்மா பாம்யான் மாகாணத்தில் சிறு குகையில் வாழ்ந்து வருகிறார். கடுமையான நெருக்கடிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறு துணிக்கடை ஒன்றை நடத்திவந்தார். தாலிபான்களின் ஆட்சிக்கு வந்ததும் வியாபாரம் சரிந்தது, “மக்களிடம் வாங்குவதற்கு பணம் இல்லை” என்கிறார் ஷய்மா.தனது நான்கு குழந்தைகளுக்கு மாவும் எண்ணெய்யும் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் 27 வயதான விவசாயி ஜாவத், “எதிர்காலம் குறித்து சிறிதும் நம்பிக்கையில்லை” என்கிறார்.நசீம் மற்றும் அவரது குடும்பம் பான்யானில் சிறு குகை ஒன்றில் வசித்து வருகின்றனர். கட்டட தொழிலாளியான நசீம், சில நாட்களாக வேலையில்லாமல் தனது குடும்பத்தினருக்கு அன்றாட உணவுக்கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.