இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை
“இரவு 10 மணிக்கு எங்களால் உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது. அதன் பிறகு இறந்த உடல்களை எடுத்தோம், இது மிக மிக துயரமானது. என் பணியில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்றார்.
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் ரயில்வேத்துறை மிகவும் மோசமாக சிதிலமடைந்திருக்கிறது என்பதையே இந்த ரயில் விபத்து நமக்கு உணர்த்துகிறது. ரயில் கழிவறை முதல் தண்டவாளங்கள் வரை அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய செய்திருக்கிறது அரசு. தனியார்மய – தாராளமய- உலகமய கொள்கையின் விளைவாக அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்ட சிதிலமடைய வைக்கப்படுகின்றன. அதன் விளைவாக ரயில்வே சிக்னல் முதல் தண்டவாளம் வரை அனைத்தும் பராமரிக்கப்படவில்லை என்பதே உண்மை.
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 200 கிமீ (125 மைல்) தொலைவில் நடந்துள்ளது இந்த விபத்து. ஒடிசாவின் தீயணைப்புத் துறையின் இயக்குநர் சுதன்ஷு சாரங்கி கூறுகையில், “உடைந்த ரயில் பேட்டிகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம், ஆனால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.“இரவு 10 மணிக்கு எங்களால் உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது. அதன் பிறகு இறந்த உடல்களை எடுத்தோம், இது மிக மிக துயரமானது. என் பணியில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்றார்.உருகுலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப்பணியில் தொழிலாளர்கள்வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டிருக்கும் பல உடல்கள் ரயில் தண்டவாளத்தில் இருக்கின்றன. உள்ளூர் மருத்துவமனையில் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய வந்தனர்.இரும்பு பொருட்களே சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் உடல்கள் எப்படி சிதைந்திருக்கும் என்று நினைத்தாலே கொடூர மரண ஓலம் நம் மனதை உலுக்கும்