16.06.2023
திருச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது
பா.ஜ.க குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்!
பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
திருச்சியில் உள்ள அரியமங்கலம் – அம்மாகுளம் பகுதியில், பாஜக-வைச் சேர்ந்த வினோத் என்ற சமூக விரோதி, கஞ்சா விற்பனை மற்றும் செயின் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில், போலீசின் துணையுடனும், பாரதிய ஜனதா கட்சியின் ஆசியுடனும் ஈடுபட்டு வருகிறான். கஞ்சா விற்பனை செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் சமூக விரோதிகளை எதிர்த்து அப்பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளரான தவ்பீக்.
இந்நிலையில் ஜூன் 15 அன்று இரவு பாஜக ரவுடியான வினோத் மற்றும் அவனது கூட்டளிகள், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தவ்பீக்கைச் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தவ்பீக்கின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டி, கொலை செய்ய முயற்சித்துள்ளது அக்கும்பல். தற்போது, தவ்பீக் திருச்சி அரசுப் பொது மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் – அம்மாகுளம் கிளைச்செயலாளர் தவ்பீக் மீதான பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த குண்டர்களான வினோத் மற்றும் அவனது கூட்டாளிகளை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சமூக விரோதிகள், குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உள்ளிட்ட காவி பயங்கரவாத அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பு.மா.இ.மு கேட்டுக்கொள்கிறது.
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642.